500 ஆண்டுகளுக்கு முன்பு சூத்திரர்கள் கல்வி கற்க முடியாத நிலை இருந்தது : சித்தராமையா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

500 ஆண்டுகளுக்கு முன்பு சூத்திரர்கள் கல்வி கற்க முடியாத நிலை இருந்தது : சித்தராமையா

பெங்களூரு, டிச.13 500 ஆண்டு களுக்கு முன்பு சூத்திரர்கள் கல்வி கற்க முடியாத நிலை இருந்தது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். 

பெங்களூரு தாசரஹள்ளியில் சுதந்திர போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணா சிலை நிறுவப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா 11.12.2022 அன்று நடைபெற்றது. அதில் கருநாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்துகொண்டு அந்த சிலையை திறந்து வைத்து பேசியதாவது:- சங்கொள்ளி ராயண்ணா நாட்டின் சுதந்திரத் திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு தனது உயிரைத் தியாகம் செய்தார். ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு தேசபக்தர் பிறக்க வேண்டும் என்பது ராயண்ணாவின் விருப் பமாக இருந்தது. நமது நிலம், நீர், மொழியை காக்க ராயண்ணா போல் போராட தயாராக வேண் டும். குருபா சமூகத்தில் கனகதாசர், ராயண்ணா, காளிதாசர் போன்ற மகான்கள் பிறந்துள்ளனர். கனக தாசர் பிறந்த இடம் காகினெலே. 500 ஆண்டுகளுக்கு முன்பு சூத்திரர்கள் கல்வி கற்க முடியாத நிலை இருந்தது. அம்பேத்கரின் தந்தை ஆங்கிலேயர்களின் ராணு வத்தில் பணியாற்றியதால் அவ ருக்கு படிக்க அனுமதி கிடைத்தது. இந்த வரலாற்றை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். யாருக்கு வரலாறு தெரியாதோ அவர்களால் வரலாற்றை படைக்க முடியாது.

இன்று நாட்டில் ஜாதி முறை இருப்பதற்கு காரணம் யார்?. இதனால் ஏற்றத்தாழ்வு உருவா னது ஏன்?. இவற்றுக்கு எதிராக கனகதாசர், புத்தர், அம்பேத்கர் ஆகியோர் போராடினர். ஜாதி-மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறார்கள். இத்தகைய விரோத ஏற்றத்தாழ்வை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் மகான்களுக்கு சிலைகளை நிறுவுகிறோம். நான் 1995ஆம் ஆண்டு நிதித்துறை அமைச்சராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன். ஆனால் இந்த இட ஒதுக்கீட்டை பறிக்க முயற்சி செய்கிறார்கள். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நான் முதலமைச்சராக இருந்தபோது, அன்ன பாக்கிய திட்டத்தை கொண்டு வந்து மக்களுக்கு இலவச அரிசி வழங் கினேன். ஹிந்து-முஸ்லிம் மக்க ளிடையே மோதல் போக்கை சிலர் உருவாக்க முயற்சி செய் கிறார்கள். மனிதர்களை மனி தர்கள் நேசிக்கும் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சி நடக் கிறது. இவ்வாறு சித்தராமையா பேசினார்

No comments:

Post a Comment