டிஎன்பிஎஸ்சிகுரூப் 4 தேர்வு: 2569 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 28, 2022

டிஎன்பிஎஸ்சிகுரூப் 4 தேர்வு: 2569 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு

சென்னை, டிச. 28- குரூப் 4 தேர்வில் 2569 காலி பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள தாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பல் வேறு பதவிகளுக்கு காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலகர், இடைநிலை உதவி யாளர், வரித்தண்டலர், தட்டச் சர் உள்ளிட்ட பல்வேறு பதவி களுக்காக காலியாக உள்ள 7382 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட இந்த தேர்வை எழுத 2,85,328 பேர் விண்ணப்பித்திருந்தனர்.  

தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில், 7689 மய்யங் களில் நடத்தப்பட்ட தேர்வு சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. தேர்வு முடிந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலை யில், தேர்வு முடிவு இன்னும் அறிவிக்கப்படாதது தேர்வர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. முதலில் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது. . 

இதில், ஏற்கெனவே 7301 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டி ருந்த நிலையில், தற்போது 9,870 காலி பணியிடங்கள் இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் 2023 ஜனவரி மாதத்தில் குரூப் 4 ரிசல்ட் வெளியிடப்படும் என தெரிய வருகிறது.


No comments:

Post a Comment