தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் (நிகர்நிலை) பெரியார் உயராய்வு மய்யத்தின் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான பெரியார் 1000 வினா-விடை போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட மற்றும் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் தோறும் பரிசளிப்பு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 14,15 தேதிகளில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், பெரியார் புத்தகங்களும் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக் கழகத்தின் சார்பில் சான்றிதழும் பங்கேற்ற பள்ளிகளுக்கு தந்தை பெரியார் படமும் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன் தலைமையில், செயலாளர் கி.தளபதிராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார், அமைப்பாளர் ஞான.வள்ளுவன், நகர செயலாளர் சி.காமராஜ், குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், செயலாளர் கு.இளமாறன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment