துறையூர் ஒன்றியத்தில் பெரியார் 1000 வினா-விடை தேர்வில் வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 23, 2022

துறையூர் ஒன்றியத்தில் பெரியார் 1000 வினா-விடை தேர்வில் வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசளிப்பு

துறையூர், டிச. 23- துறையூர் ஒன்றி யம் மதுராபுரி, கரட்டாம்பட்டி, ஆதனூர் மற்றும சேனப்ப நல்லூர் ஆகிய பகுதிகளில் பெரியார் 1000 வினா விடைத் தேர்வில்  வெற்றிபெற்ற பள்ளி மாண வர்களுக்கு சான்றிதழ், பரிசளிப்பு நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:

மதுராபுரி

நேற்று 22.12.22 காலை துறையூர் மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெரியார் 1000 வினாவிடை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாண வியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவன் வருண் பிரசாத். இரண்டாம் இடம் பெற்ற மாணவி மோனிஷா. மூன்றாம் இடம் பெற்ற மாண வன் பீர் முஹம்மது ஆகியோ ருக்கு சான்றிதழ். முறையே தங்கம். வெள்ளி. வெண்கல பதக்கங்கள். புத்தகங்கள். பெரியார் போட்டோக்களை திருச்சி மண்டல திராவிடர் கழக செயலாளர் ச.மணிவண் ணன் வழங்கினார். பள்ளிக்கு தந்தை பெரியார் போட்டோ வழங்க பட்டது. நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் திருமதி. சாமிக்கண்ணு. மற்றும் பள்ளி ஆசிரியைகள். ஒன்றிய செயலாளர் வரதராஜன்.

மாவட்ட மாணவர் கழக தினேஷ் பாபு. ரஞ்சித். கோர்ட். பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். துறையூர் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் 1000 போட்டியில் பள்ளி அளவில் முதல் மூன்று இடம்பெற்ற மாணவர்களுக்கு 13 பெரியார் போட்டோக்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கதாகும்.

கரட்டாம்பட்டி

21.12.2022 அன்று பிற்பகல் துறையூர் வட்டம் கரட்டாம் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலபெரியார் 1000 வினாவிடை போட்டியில் மாவட்ட அள வில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி. எம். தர்ஷினிக்கு ரூ. 3000 ரொக்கப் பரிசு சான்றிதழ் பெரியார் போட்டோ புத்த கங்கள் மற்றும் பதக்கம் ஆகிய வற்றை திருச்சி மண்டல கழக செயலாளர் துறையூர் ச. மணி வண்ணன் வழங்கினார். பள் ளிக்கு தந்தை பெரியார் போட்டோவை தலைமையாசி ரியர் திருமாவளவனிடம் வழங் கப்பட்டது. போட்டியில் இரண்டாம் மூன்றாம் இடம் பெற்ற மாணவிகளுக்கும் தேர்வு எழுதிய அனைவருக்கும் சான்றிதழ்கள் பரிசுகள் வழங் கப்பட்டன. உடன் இலால்குடி மாவட்ட ப. க. ஆசிரியரணி தலைவர் அ.சண்முகம் இளை ஞரணி சு. மகாமுனி. த. இரஞ்சித் சரண் ராஜ். பள்ளி உதவி தலைமையாசிரியர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆதனூர் 

பெரியார் 1000 வினாவிடை போட்டியில் கலந்து கொண்ட ஆதனூர் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலை பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் முதல் மூன்று இடங்கள் பெற்றவர் களுக்கு பெரியார் போட்டோ. சான்றிதழ். புத்தகங்கள் வழங் கப்பட்டது. பள்ளிக்கு துறையூர் கழக சார்பில் பெரியார் போட்டோ வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி மண்டல திராவிடர் கழக செயலாளர் துறையூர் ச. மணிவண்ணன் பள்ளி ஆசிரியர் மு. முத்து செல்வன் மற்றும் ஆசிரியை களிடம் வழங்கினார்.

சேனப்பநல்லூர் 

அரசு மேல் நிலைப் பள்ளி சேனப்பநல்லூரில் பெரியார் 1000 போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவி களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பெரியார் போட்டோ ரூபாய் 500, ரூபாய் 300, ரூபாய் 200 ரொக்கமும் பதக்கங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. 

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரி யரும் மாவட்ட ப.க.ஆசிரியரணி தலைவருமான அ. சண்முகம் வரவேற்பு நல்கினார்.திருச்சி மண்டல கழக செயலாளர் துறையூர் ச. மணிவண்ணன் துறையூர் நகர இளைஞரணி தலைவர் சு. மகாமுனி. த. ரஞ்சித் சரண்ராஜ் மற்றும் உதவி தலைமையாசிரியர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment