இராமேசுவரம், டிச. 13- கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி இராமேசுவரம் தீவு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பெரியார் ஆயிரம் வினா- விடை போட்டி நடை பெற்றது .
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் பெரியார் 1000 வினா--விடை போட்டி யில் வெற்றி பெற்ற இரா மேசுவரம் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி களுக்கு முதல் பரிசு ரூ.6000 இரண்டாம் பரிசு ரூ. 3000 மூன்றாம் பரிசு ரூ.2000 மற்றும் ஆறுதல் பரிசுகள் ரூ 1000 மற்றும் ரூ 500 ஆறுதல் பரிசுக ளாகவும், பதக்கங்களும், பாராட்டு சான்றிதழ்க ளும் வழங்கப்பட்டது
ஏற்பாடுகளை இராம நாதபுரம் மாவட்ட கழக தலைவர் மு.முருகேசன் செய்திருந்தார் பரிசுகளை யும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் கழக மண்டல தலைவர் கே.எம். சிகாமணி வழங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தில் லைபாக்கியம், தங்கச்சி மடம் கவுன்சிலர் கார்ல் மார்க்ஸ், மதிமுக கெவின் குமார், முத்துக்கருப்பன், சிபிஅய் செயலாளர் காளி தாஸ், திமுக கோவிந்த ராஜ் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சியை தலைமை ஆசிரியை சிறப்பாக செய் திருந்தார்.
No comments:
Post a Comment