செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 23, 2022

செய்திச் சுருக்கம்

மகளிருக்கான...

தமிழ்நாடு அரசு சார்பில், நடப்பாண்டில் மகளிருக்கான யுபிஎஸ்சி (ஒன்றிய அரசுப் பணிக்கான) பயிற்சி வகுப்புகள் சென்னை ராணி மேரி மற்றும் மதுரை மீனாட்சி கல்லூரிகளில் நடைபெறவுள்ளது.

பல்லுயிர்

தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை அறிவித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

குடியிருப்பு

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2022-23ஆம் ஆண்டு 2 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1,14,073 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்.

உத்தரவு

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் என தனியார் மென்பொருள் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

நடக்கும்

தமிழ்நாட்டில் விதிமுறைகள்படிதான் மருத்துவக் கவுன்சில் தேர்தல் நடத்தப்படும் என மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

அழுகின!

வடகிழக்கு பருவ மழை காரணமாக சீர்காழி பகுதி யில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டியதில், கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வடியாததால் 30,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகியது.

சிறப்புப் படை

தென் மாவட்டஙகளில் ஜாதி ரீதியிலான (ஆணவக்) கொலைக் குற்றங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறை இயக்குநர், மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

அனுமதி

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக 254 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு.

தாக்குதல்

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் 5 பாக்டீரியாக்கள் தொடர்பான நோய்களால் 6.8 லட்சம் பேர் பலியானதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment