செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

செய்திச் சுருக்கம்

கனிவுடன்

அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கனிவுடன் நடக்க வேண்டும் என போக்குவரத்து துறை முதன்மை செயலர் கே.கோபால் உத்தரவு.

நியமனம்

தமிழ்நாட்டில் தெரு விளக்குகள் பராமரிப்பு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்கு தனியார்களை நியமிப்பது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.

உத்தரவு

சென்னை வியாசர்பாடியைச் சோந்த கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த நிகழ்வு தொடர்பாக 6 மாதங்களில் அறிக்கை அளிக்க சுகாதாரத் துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு.

மறுசீரமைக்க...

கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 19 இடங்களில் செயல்பட்டு வரும் பள்ளி விடுதிகளில் 15 கல்லூரி விடுதிகளை மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.

அமலானது

ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி, முன் கூட்டிய ஏற்பாடுகள் செய்த பிறகே பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதாக உச்சநீதிமன்றத் தில் ஒன்றிய அரசு தகவல்.

முகக்கவசம்

விமான பயணத்தின்போது முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

நடுவர் மன்றம்

தென் பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரத்தில் அடுத்த 4 வாரத்தில் நடுவர் மன்றம் அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது.

கூடுதலாக...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட நிதியோடு மேலும் கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வீதம் நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின உத்தரவு.

கல்வெட்டு

தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் மைசூரில் இருந்து 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு ‘மைப்படிகள்' தமிழ்நாட்டுக்கு வந்துள்ளன என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.

5,191 புத்தகங்கள் கொடை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன்னிடம் உள்ள 5,191 புத்தகங்களை சென்னைப் பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் மேயர் ஆர்.பிரியாவிடம் நேற்று (16.11.2022) ரிப்பன் கட்டடத்தில் வழங்கினார்.


No comments:

Post a Comment