'நமக்கு நாமே திட்ட'த்தின் கீழ் தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு இருக்கைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

'நமக்கு நாமே திட்ட'த்தின் கீழ் தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு இருக்கைகள்

தஞ்சாவூர்,நவ.24- தமிழ்நாடு அரசின் 'நமக்கு நாமே திட்டம்' மற்றும் கும்பகோணம் 'பரஸ்பர சகாய நிதி லிமிடெட்' இணைந்து தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 200 இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (23.11.2022) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர், தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர்.அஞ்சுகம்பூபதி ஆகியோர் மாணவர்கள் பயன்பாட்டிற்கு இருக்கைகளை வழங்கினர். இந்நிகழ்வில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment