சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே பிணையில் விடுதலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே பிணையில் விடுதலை

மும்பை, நவ 28 பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும் டேவுக்கு உச்சநீதிமன்றம்  பிணை வழங்கியதை அடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

முன்னதாக டெல்டும்டேவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய பிணைக்கு இடைக்கால தடை கோரி என்.அய்.ஏ. தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராட்டியர்களுக்கு இடையிலான போரின் 200-ஆவது ஆண்டு நினைவு நிகழ்ச்சி 2018 ஜனவரி 1 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட சமூ கத்தவர் பீமா கோரேகானில் கூடியிருந் தனர். அப்போது ஏற்பட்ட கல்வீச்சு சம்பவம் வன்முறையாக வெடித்து இனக்கலவரத்தில் முடிந்தது இந்தக் கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பு என்.அய்.ஏ.-வுக்கு மாற்றப் பட்டதை அடுத்து 2020இல் எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இரண்டு ஆண்டு களுக்குப் பின்னர் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் ஆன்ந்த் டெல்டும்டேவுக்கு பிணை வழங் கியது. தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார் என்றும் அதற்கு ஆதரவாக செயல்பட்டார் என்றும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சதித்திட்டம் தீட்டியதாகவோ, தீவிரவாத செயலிலோ, சட்டவிரோத மான நடவடிக்கைகளில் ஈடுபட்டதா கவோ இவர் மீது குற்றம் எதுவும் சாட்டப்படவில்லை.

மேலும், அவர் இரண்டு ஆண்டுகள் ஏற்கெனவே சிறையில் இருந்துவிட்டார். இந்த வழக்கில் குற்றம் நிரூபணம் ஆனாலே 10 ஆண்டுகள் தான் சிறைத் தண்டனை கிடைத்திருக்கும் என்று கூறி மும்பை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் பிணை வழங்கியது. இந்நிலையில், பிணை வழங்க இடைக்கால தடை விதிக்கக்கோரி என்.அய்.ஏ. தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.No comments:

Post a Comment