அரசியல் சாசனத்துக்கு எதிராக பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

அரசியல் சாசனத்துக்கு எதிராக பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தல்

சென்னை, நவ 6 தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று (5.11.2022) நடந்தது. 

கூட்டத்திற்கு தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா  தலைமை தாங்கினார். பொதுக்குழுவில், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளவை பரிசீலித்து, குறைந்தபட்சம் 5 சதவீதமாக அதி கரிக்க வேண்டும். சிறைகளில் நீண்ட நெடுங் காலமாக வாடி வரும் தண்டனை சிறைவாசிகள், குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்பட வேண்டும். பொது சிவில் சட்ட அபா யத்தை தமிழ் நாடு அரசு களைய வேண்டும். தமிழ் நாட்டின் சமூக அமைதியை சீர்குலைக்கும் நோக் கத்தோடு இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


No comments:

Post a Comment