சபரிமலையில் அப்பம், அரவணை முறைகேடு உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

சபரிமலையில் அப்பம், அரவணை முறைகேடு உயர்நீதிமன்றம் உத்தரவு

பத்தனம்திட்டா, நவ. 25 சபரிமலை அய் யப்பன் கோவில் நிர்வாகம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், கேரள உயர்நீதி மன்றத்தின் நேரடி கண்காணிப்பில் தான் அனைத்து செயல்பாடுகளும் உள்ளன. தற்போது சபரிமலையில் மண்டல, மகர விளக்கையொட்டி நடை திறக்கப்பட்டு நாள்தோறும் பல்லாயிரக்கணக் கானவர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினமும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் சாமி தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை நாட்களில்  மட்டும் 1 லட்சம் பேர் வரை தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர் களுக்கும் தினமும் 2 லட்சம் டின் அர வணை, 1.50 லட்சம் பாக்கெட் அப்பம் ஆகியவை தங்கு தடையின்றி வினி யோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க தற்போதைய நிலையில் 15 லட்சம் டின் அரவணை இருப்பில் உள்ளது.

இந்த நிலையில் அரவணை அடைக் கப்படும் காலி டின்களை வழங்கும் ஒப்பந்த நிறுவனம், காலி டின்களை வழங்குவதில் காலம் தாழ்த்தி வருவதாக உயர்நீதிமன்றத்தில் சபரிமலை சிறப்பு ஆணையர் அறிக்கை சமர்ப்பித்தார். இதனை தொடர்ந்து ஆணையரின் அறிக்கை தொடர்பான விசாரணை கேரள உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் அனில், நரேந்திரன், அஜித்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்யப்படும் அரவணை, அப்பம் ஆகியவற்றின் வினியோக வசதிகள் குறித்து திருவிதாங்கூர் தேவஸ் தானம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் காலதாமதம் செய்து வரும் ஒப்பந்ததாரர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment