தமிழர் தலைவரின் புகழ்மிக்க உரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

தமிழர் தலைவரின் புகழ்மிக்க உரை!

சென்னை பெரியார் திடலில், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் ஆசிரியர் ஆற்றிய உரை மிகச் சிறப்பாக இருந்தது. சேது அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற  அன்னை சேதுமதியின்  17ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் நாம் எல்லோரும் ஒரே ஜாதி, ஒரே ரத்தம் -  ஜாதி, மதம்தான் நம்மைப் பிரிக்கின்றது என்பதற்குச் சான்றாக குறுந்தொகையை நினைவு கூர்ந்தார். "குறுந்தொகை வாழ்வுரை ஆக்கியது - பெருங்கவிக்கோவின் குடும்பத்தில் - 

சிகாகோவில் மூன்று நான்கு சுயமரியாதைத் திருமணங்கள் இக்குடும் பத்தில் நடைபெற்றுள்ளன. "நான் ஒருவரை காதலிக்கின்றேன்" என்றவுடன் அவர் நம் ஜாதியா என்று இவர் குடும்பத்தில் யாரும் கேட்பதில்லை" என்பதை குறிப்பிட்டு சுயமரியாதை இயக்கத்தின் சிறப்பை தமிழர் தலைவர் புலப்படுத்தினார். இது தமிழர் தலைவரின் புகழ்மிக்க உரை எனில் மிகையல்ல!

பெருங்கவிக்கோவின் பேச்சில் அந்தணர் என்போர் அறவோர் என்பதற்கு நல்ல விளக்கம். அவரின் உரை - எல்லோரும்  அறிய வேண்டியது.

 -ஆ.மு.ரா. இளங்கோவன், விழுப்புரம் 


No comments:

Post a Comment