சாமியார் பாபாராம்தேவ் தயாரிப்பு மருந்தைப் பயன்படுத்தினால் கண்பார்வைக்கு ஆபத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

சாமியார் பாபாராம்தேவ் தயாரிப்பு மருந்தைப் பயன்படுத்தினால் கண்பார்வைக்கு ஆபத்து

புதுடில்லி, நவ.14-   சாமியார் பாபாராம் தேவின் பதஞ்சலி நிறுவன தயாரிப்பு மருந்தை பயன்படுத்தினால் கண்பார் வைக்கு ஆபத்து  நேரும் என கேரளத்தை சேர்ந்த மருத்து வர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அய்ந்து மருந்துகளுக்கு உத்தரா கண்ட் மாநில அரசு தடை விதித்துள்ளது. உற்பத்தியை உட னடியாக நிறுத்துமாறும் எச்சரித் துள்ளது. 

இது தொடர்பாக உத்தரா கண்ட் மாநில ஆயுர்வேத மற்றும் யுனானி கட்டுப்பாட்டு அமைப்பு கூறியிருப்பதாவது: பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் திவ்யா மதுக்ரிட், திவ்யா அய்க்ரிட் தங்கம், திவ்யா தைரோக்ரிட், திவ்யா பிபிகிரிட் மற்றும் திவ்யா லிபிடோம் ஆகிய அய்ந்து மருந்துப் பொருட்களின் உற்பத்தியை நிறுத்தவேண்டும். மருந்துப் பொருட்களின் விளம்பரத்தையும் நிறுத்த வேண்டுமென எச்சரித்துள்ளது. 

பாபாராம்தேவ் மேற்குறிப் பிட்டுள்ள அய்ந்து மருந்துகளும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு, குளுக்கோமா எனும் கண் நோய், அதிக கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்காக பயன்படுத்த லாம் எனக் கூறியுள்ளது. உத்தரா கண்ட் மாநில ஆயுர்வேத மற்றும் யுனானி சர்வீசஸ் உரிம அதிகாரி மருத்துவர் ஜி.சி.எஸ். ஜங்பாங்கி இது குறித்து கூறுகையில், 

“இந்த மருந்துகளின் தயாரிப்பை  மதிப் பாய்வு செய்ய குழு அமைக்கப்பட் டுள்ளது. சம்பந்தப்பட்ட அதி காரிகளின் மறு உத்தரவு வரும் வரை அய்ந்து மருந்துகளின் உற்பத்தியை நிறுத்த  உத்தரவிடப் பட்டுள்ளது. இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்திற்கு விளக் கம் கேட்டு தாக்கீது அனுப்பப் பட்டுள்ளது” என்றார்.  

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்து வர் கே.வி.பாபு அளித்த புகாரின் அடிப்ப டையில், உத்தராகண்ட் மாநில ஆயுர்வேத மற்றும் யுனானி சேவை அமைப்பு இந்த நடவடிக்கையை எடுத்துள் ளது.  குளுக்கோமா, கண்புரை உள்ளிட்ட பல கண் பிரச் சனைகளுக்கு பதஞ்சலி தயா ரிக்கும் கண் சொட்டு மருந்து பயனுள்ள தாக இருக்கும் என விளம்பரம் செய்யப்படுகிறது. பாபா ராம்தேவ் நிறுவனம் கூறுவது போல், அவரது மருந்து கண் தொடர்பான பிரச்சினை களைத் தீர்க்காது. ஆபத்தில் தான் முடியும் எனக் கூறியிருந் தார் என்பது குறிப் பிடத்தக்கது.


No comments:

Post a Comment