அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள்

ராமநாதபுரம், நவ.6 இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் முதல் அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தவண்ணம் உள்ளனர். இதுவரை 187 தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாடு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று  (5.11.2022) அதிகாலை இலங்கை மன்னார் பகுதியின் 3 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆண்கள், 5 பெண்கள், 2 குழந்தைகள் என 10 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர். இவர்களை நேற்று காலை தனுஷ்கோடி கடலோர காவல்துறையினர் விசாரணை செய்து, மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

2 மாத குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை, கணவர் ஆகியோருடன் வந்த அனுசியா என்பவர் கூறும்போது, பொருளாதார நெருக்கடியால் உணவு உள்ளிட்ட பொருட் களை வாங்க முடியாமல் சிரமப்பட்டோம். அதனால் தமிழ்நாட்டிற்கு வந்தோம். எங்கள் 4 பேரையும் படகில் அழைத்து வர ரூ.1.50 லட்சம் கொடுத்தோம் என்று கூறினார்.


No comments:

Post a Comment