செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

செய்தியும், சிந்தனையும்....!

கொலைப் பாதகம்

* ராமர் அனைவருக்கும் சொந்தம்.

- பரூக் அப்துல்லா

>> சூத்திர சம்பூகனை வாளால் வெட்டிக் கொன்றானே அந்த ராமனா?

தமிழ் நீஷப் பாஷை?

* ஆன்மீகத்துடன் மட்டுமே தமிழுக்கு நெருக்கம். 

- பி.ஜே.பி. அண்ணாமலை

>> கோவிலுக்குள் தமிழை விடமாட்டோம் என்கிறார்களே!

உசுப்பேற்றும்?

* டில்லி பறந்தார் ஆளுநர் ரவி. 

>> உங்கள் ‘வேகம்' போதாது என்று உசுப்பேற்றுமோ டில்லி!

கடவுளை மற - மனிதனை நினை!

* சபரிமலை பக்தர்களுக்கு தனி மருத்துவ வார்டு. 

>> அய்யோ, அப்பா - அய்யப்பன்மீது நம்பிக்கை இல்லையா?

பூனைக்குட்டி வெளியில் வந்தது

* முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு பி.ஜே.பி.க்கு வெற்றித் தேடித் தரும்.

- ஹர்திக் படேல், பி.ஜே.பி. வேட்பாளர் 

>> உண்மை நோக்கம் வெளிவந்து விட்டது! அதே நேரத்தில், பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்கள் பி.ஜே.பி.யை மண்ணைத் தின்ன வைப்பார்களே!


No comments:

Post a Comment