டில்லியின் காற்று மாசுபாடு பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை வருண்காந்தி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

டில்லியின் காற்று மாசுபாடு பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை வருண்காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, நவ. 5 டில்லியின் காற்று மாசுபாடு பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வில்லை என்று வருண்காந்தி குற்றம் சாட்டி யுள்ளார். டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த விவகாரத்தை முன் வைத்து அரசு மீது பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர். வருண் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'டில்லி காற்று மாசுபாட்டினால் இதயம், நுரையீரல் பிரச்சினைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நோயாளி களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆனால் இவ்வளவு பெரிய பிரச்சினையை மக்களோ, அரசோ தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை' என சாடியுள்ளார். மேலும் அவர், 'டில்லி மற்றும் சுற்று வட்டாரங்களில் 

10-இல் 8 குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சினைகள் உள்ளன. பல ஆண்டுகளாக ஆலோசனை நடத்தியும், இந்த பிரச்சினையை தீர்ப்பதில் அரசின் பல்வேறு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்போ, கவலையோ இல்லாதது ஏன்?' என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.


தலைமறைவுக் குற்றவாளிகளைப்  பிடிக்க  தனிப்படை

சென்னை,நவ.5- சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக் கைகளை எடுத்துவருகிறார். அதன் ஒரு பகுதியாக 

செயின் மற்றும் செல்போன் பறிப்பு கொள்ளையர்களுக்கு எதிராக  சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு தணிக்கையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, வீடு புகுந்து திருடுதல் போன்ற வழக்குகளில் தொடர் புடைய 562 பேர் தணிக்கை செய்யப்பட்டனர். அவர் களில் 15 பேரிடம் திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், நீண்ட நாட்களாக தலை மறைவாக இருந்த 17 குற்றவாளிகள் பிடிபட்டனர்.

அதுமட்டுமின்றி, பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 480 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும், 45 குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதி மொழி பிணை பத்திரம் பெற குற்ற விசாரணை முறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தலைமறைவாக உள்ள கொள்ளையர்கள், குற்றவாளிகளை கைது செய்ய அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமை யிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை பெருநகரில் பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன என சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.




No comments:

Post a Comment