சென்னையில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

சென்னையில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

சென்னை, நவ.6 சென்னையில் வரும் 9ஆம் தேதி, தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம், நடக்கிறது. 

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், காலை 9:30 மணி முதல் பகல் 1:30 மணி வரை, முகாம் நடக்கும். சுயமாக தொழில் துவங்க விரும்பும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்.

சொந்தமாக தொழில் துவங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் ஆகியவை குறித்து, முகாமில் தெரிவிக்கப்படும். 

முகாம் இறுதியில், தொழில் துவங்க விரும்புவோர் பெயர் பெறப்பட்டு, அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப் படுவர்.

அடத்த கட்டமாக மூன்று நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். 

மேலும் விபரங்களுக்கு, 044 - 22252081, 22252082, 9677152265, 9444556099 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment