கனமழையை எதிர்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 13, 2022

கனமழையை எதிர்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை, நவ.13 வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (12.11.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் சுமார் 40,500 எக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதால், நீரை வடியவைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், தமிழ்நாட்டில்  இன்னும் 2 நாள்களில் பரவலாக கனமழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், அணைகள், நீர்த்தேக்கங்களில் தண் ணீர் இருப்பு, வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்குமாறும், உபரி நீரை வெளியேற்றும்போது மக்க ளுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்கு மாறும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, தலை மைச் செயலர் வெ.இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலர் பிரபாகர், காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உள்ளிட்டோர் கலந்துகொண் டனர். இதற்கிடையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், "மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் அரசு மற்றும் உள் ளாட்சிப் பணியாளர்களின் இடை விடாத உழைப்பு பாராட்டத்தக்கது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment