சிவன்மலை கோயிலில் உடை கட்டுப்பாடு விஷமிகளின் வதந்திக்கு முற்றுப்புள்ளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

சிவன்மலை கோயிலில் உடை கட்டுப்பாடு விஷமிகளின் வதந்திக்கு முற்றுப்புள்ளி

திருப்பூர்,நவ.6- சிவன்மலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு தொடர்பில் லாத சில விஷமிகள் துண்டு பிரசுரங்களை கோயிலில் பல பகுதிகளில் ஒட்டியதுடன், அதனை சமூக ஊடகங் களின் மூலமும் பரப்பி யுள்ளனர். அதில் ’துப்பட்டா இல்லாத உடை மற்றும் லெகின்ஸ் உடையில் பெண்கள் கோயிலுக்குள் அனுமதியில்லை’ என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இது விஷமிகளின் வதந்தி பரப்பும் வேலை என்பது தற்பொழுது அம்பலமாகி யுள்ளது. சிவன்மலை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் விமலா செய்தியாளர்களிடம் கூறுகை யில், “கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப் பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சொல்லியதாகக் கூறி, கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் சொல்லி, காவலாளி ஓட்டி உள்ளார். இந்து சமய அற நிலையத் துறையின் நிர்வாக கவனத்துக்கு கொண்டு வராமல் இதனை செய்துள்ளார். தற்போது இதனை அகற்றி விட்டோம். அரசு எதுவும் சொல்லாமல், இனி இதுபோன்று செய்யக்கூடாது” என எச்சரித்துள்ளோம் என்றார்.


No comments:

Post a Comment