‘சதிகாரர்கள் எனக்கெதிராக நீர்மூழ்கிக் கப்பலைப் போல வேலை பார்க்கிறார்கள்!’ ஜார்க்கண்ட் முதலமைச்சர் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

‘சதிகாரர்கள் எனக்கெதிராக நீர்மூழ்கிக் கப்பலைப் போல வேலை பார்க்கிறார்கள்!’ ஜார்க்கண்ட் முதலமைச்சர் குற்றச்சாட்டு

ராஞ்சி, நவ. 20- தனது ஆட்சி யைக் கவிழ்ப்ப தற்காக, பாஜகவினர் சதித்திட்டத் தில் ஈடுபட்டுள்ளதாக வும், அவர்கள் நீர்மூழ்கிக் கப்பலைப் போல மறை முகமாக வேலை பார்த்து வருவதாகவும் ஜார்க் கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார். 

ஜார்க்கண்ட் மாநிலத் தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங் கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா  தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக இருக்கிறார். இந்த ஆட்சி யைக் கவிழ்ப்பதற்கு பாஜக தீவிர  முயற்சி மேற்கொண்டு வருகிறது.  நிலக்கரி சுரங்கத்துறையில் ஊழல் செய்து அதன் மூலம் ரூ. 1,000 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டியதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது குற்றம் சாட் டியது. தேர்தல் ஆணை யத்திற்கும் புகார்  மனு அனுப்பியது. 

தேர்தல் ஆணையமும்,  இதுகுறித்து விசாரித்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்  1951இல் பிரிவு 9-ஏ மீறப்பட்டிருப்பதாகக் கூறி ஹேமந்த் சோரனை சட்டப்பேரவை உறுப் பினர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரைத் திருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுநர் எந்த முடிவையும் எடுக் காத நிலையில், ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களையே சோரனுக்கு எதிராக கலகத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டது. இதை யடுத்து ஹேமந்த் சோரன் தானா கவே முன்வந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, அதில் தனக் குள்ள பெரும்பான் மையை நிரூபித்தார். 

எனினும், நிலக்கரி சுரங்க ஒதுக் கீட்டு வழக் கில் ஹேமந்த் சோரனுக்கு அடுத்தடுத்து சம்மன் களை அனுப்பி அமலாக் கத்துறை மூலம் குடைச் சல் கொடுத்து வரு கிறது. ஹேமந்த் சோரனின் உதவி யாளர்கள் பச்சு யாதவ் மற்றும் பிரேம் பிரகாஷ் ஆகியோரையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

ஒன்றிய பாஜக அர சின் இந்த நடவடிக்கை கள், ஜார்க்கண்ட் முதல மைச்சர் ஹேமந்த் சோரனை கொந்தளிக்க வைத்துள்ளது. கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது: “நான் ரூ. 1000 கோடி ஊழல் செய்துள் ளதாக கூறுகிறார்கள். ரூ. 1,000 கோடி அளவில் மோசடி செய்ய வேண்டும் எனில் அதற்கு தற்போது உள்ள சுரங்கத்தை விட நான்கு மடங்கு பெரிய நிலக்கரி சுரங்கம் தேவைப் படும். தற்போதுள்ள சுரங்கத்திலிருந்து ரூ. 750 கோடிதான் அரசுக்கு வரு மானம் கிடைக்கிறது. எனவே இதை விட பெரிய சுரங்கம் எதுவும் இங்கு கிடையாது.  சரி அவர்கள் சொல்வதைப் போல பெரிய சுரங்கம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் அதிலிருந்து நிலக்கரியை கொண்டு செல்வதற்கு 20 ஆயிரம் ரயில்வே ரேக்கு கள் தேவைப் படும்; அல் லது 33 லட்சம் லாரிகள்  தேவைப்படும். இந்த அளவு நிலக் கரிகளை முறையான ஆவணங்கள் இன்றி ரயில்வே துறை கொண்டு செல்லாது. அவ்வாறு கொண்டு செல்லப்பட்டது என்றால், எந்த ரயில்வே அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது? நான் முத லமைச்சராக அர சியல் சாசன பதவி வகிக்கிறேன். ஆனால் விசாரணை நடக் கும் விதம், விசாரணைக்கு நான் அழைக்கப்பட்ட விதம் என எல்லாவற் றையும் பார்க்கும்போது நாட்டை விட்டு தப்பி யோடுபவர் களை அணு குவதை போல இருக் கிறது. எனக்கு தெரிந்து தொழிலதிபர்கள்தான் நாட்டை விட்டு ஓடி யுள்ளார்களே தவிர அர சியல்வாதிகள் அல்ல.  கடந்த 2019 முதலே சதி காரர்கள் எனது ஆட் சியை கவிழ்க்க நீர்மூழ்கிக் கப்பலைப் போல வேலை செய்துகொண்டிருக் கிறார்கள். ஆனால் அவர் கள் வெளி யில் தலை காட்ட பயந்தார்கள். தற் போது அவர்கள் வெளிப் படையாகவே வருகிறார் கள்.”  இவ்வாறு ஹேமந்த் சோரன் பேசியுள்ளார்.

No comments:

Post a Comment