மன்னார்குடி பந்தலடியில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

மன்னார்குடி பந்தலடியில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

மன்னை, நவ.29 ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் 26.11.2022 அன்று மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை மன்னை பந்தலடியில் நகரக் கழகத் தலைவர் உத்திராபதி தலை மையில், மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட அமைப்பாளர் அன்பழகன் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கவுதமன், மண்டல ஆசிரியர் அணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் புஷ்பநாதன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. 

ஒன்றிய கழகத் தலைவர் தமிழ்ச் செல்வம் வரவேற்புரை ஆற்றினார். கழக சொற்பொழிவாளர் சில்லத்தூர் சிற்றரசு தொடக்க உரை ஆற்றினார். 

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீர வணக்கம் தெரிவித்து, அவர்களின் ஈகத்தை எடுத்தியம்பி, ஈடற்ற பெரி யாரின் தொண்டர்கள் எவ்வளவு பெருமை வாய்ந்தவர்கள் என்பதை எல்லாம் விளக்கி சிறப்புரையாற்றி னார்.

தோழர்கள் தங்க வீரமணி, கோபால், அழகிரி, மன்னை சித்து, மணிகண்டன், இன்பக் கடல், இளங் கோவன், சந்திர போஸ், சக்திவேல், நாராயணசாமி, சிவா, வணங்காமுடி, எம்பி குமார், முரளிதரன், தமிழ்மணி, நீடாமங்கலம் அமிர்தராசு, அழ கேசன், அய்யப்பன், வெங்கட்ராமன், கோவிந்தராசு, சாந்தி, சேகர், கலிய மூர்த்தி, குணசேகரன், திரிசங்கு ஆகியோர் நிகழ்வில் பங்கு கொண்டு சிறப்பித்தனர் 

முடிவில் நகர செயலாளர் ராமதாசு நன்றி கூறினார்.

பெரிய எழுச்சியை, உணர்ச்சியை கேட்டவர்கள் மத்தியில் ஏற்படுத்து வதாக பரப்புரை அமைந்தது.

No comments:

Post a Comment