செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

செய்திச் சுருக்கம்

புதுமை திட்டம்

ஒரே பயணச்சீட்டில் சென்னை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில், மின்சார ரயில்களில் பயணம் செய்யும் வசதி விரைவில் செயல்படுத்தப் படுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

மழை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதால் 19, 20ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் மழை செய்யும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.

மானியம்

தமிழ்நாட்டில் அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களும் சிறப்பாக செயல்படுவதை கருத்தில் கொண்டு மேலும் 16 அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு தலா ரூ.2 கோடி வீதம் மொத்தம் ரூ.32 கோடி மானியம் வழங்குவதற்கான ஆணையை ஒன்றிய அரசு பிறப்பித்துள்ளது.

சிலை

தமிழ்நாட்டில் எங்கும் அனுமதியின்றி சிலைகள் வைக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

பள்ளிகளில்...

அனைத்து பள்ளிகளிலும் நடமாடும் உளவியல் ஆலோசனை மய்யம் மூலம் கலந்தாய்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

திட்டம்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது கழிப்பறைகள் மூலம் வருவாயை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரி தகவல்.

விழிப்புணர்வு

போதைப் பொருள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து சென்னையில் 171 பள்ளிகள், 12 கல்லூரிகள் உட்பட 207 இடங்களில் மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ஒப்பந்தம்

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை உருவாக்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத் துடன் ரூ. 946.92 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத் தானது.

பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை.

சான்று

இந்தியர்கள் சவுதி அரேபியா விசாவை பெறுவ தற்கு, உள்ளூர் காவல்துறையின் நற்சான்று இனிமேல் அளிக்கத் தேவையில்லை. இரு நாடுகளுக்கு இடை யிலான நல்லுறவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மறுப்பு

கோவாக்சின் தடுப்பு மருந்தை அரசியல் அழுத்தம் காரணமாக அவசர கதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாக வெளியாகி உள்ள தகவலை, பாரத் பயோடெக் நிறுவனம் மறுத்துள்ளது.


No comments:

Post a Comment