பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

பதிலடிப் பக்கம்

திராவிடம் பற்றி ஆளுநர் ரவிக்கு என்ன தெரியும்?

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

தொகுப்பு: மின்சாரம்

தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு, தெலங்கானா, கருநாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது தான். ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருகிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை யில் ‘ஏக் பாரத், உன்னத் பாரத்‘ (ஒரே பாரதம் உன்னத பாரதம்) தொடர் திட்டம் குறித்த இரண்டு நாள் கருத் தரங்கை ஆளுநர் ஆர்.என். ரவி துவங்கி வைத்தார்.

பின்னர் மேடையில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "வெள்ளையர்கள் தான் இந்தியாவை இணைத்தனர் என பலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை, இந்தியா எப்போதும் ஒருவர் ஆட்சிக்கு கீழ் இருந்தது இல்லை. ஆங்கிலேயர்களால் 1905ஆம் ஆண்டு மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் என மத அடிப்படையில் பிரிக்கப்பட்ட நேரத் தில், தமிழகத்தில் வ.உசி, பாரதியார் போராடினார்கள், பஞ்சாபில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை எதிர்த்து காமராஜர் போராடினார். எங்கோ நடக்கிறது என அவர்கள் அமைதியாக இருக்கவில்லை,

இந்தியாவைத் தெரிந்துகொள்ள - புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பாரத் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பாரத் என்பது பல்வேறு கலாச் சாரங்களை அடிப்படையாக கொண்டது. ஆனால் பாரத் என்பது யாரோ ஒருவரின் கீழ் இருப்பதில்லை, பாரத் எப்போதும் தர்மத்தைக் கடைப்பிடிப்பதாக இருந்தது. அரசர்கள் தர்மத்தை மீறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது" எனக் கூறிய ஆளுநர், இமாலயம் முதல் கடைசி கடற்பகுதி வரை பாரதம் என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.

"1956ஆம் ஆண்டு வரை மதராஸ் மாநிலமாக இருந்தது. அதன் பின் மொழி அடிப்படையில் கேரளா, கருநாடகா, ஆந்திரா அதிலிருந்து தற்போது தெலங் கானா என அரசியலுக்காக மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்தவர்கள் நான், நீ என தற்போது பேசி வரு கின்றனர். தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு, தெலங்கானா, கருநாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது தான். ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சிகள் நம்முடைய பார்வையைக் குறுக்கி உள்ளன. அரசியல் கட்சிகள் அதிகாரத்திற்காக மொழி அடிப்படையிலும், ஜாதி அடிப்படையிலும், ஜாதிக்குள் உள்கட்டமைப்புகளை எல்லாம் வைத்து அரசியல் செய்வார்கள். இதனைத்தான் நமக்குத் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இந்தியா என்பது அடிப்படையில் அனைவருக்கும் இடையே உள்ள கலாச்சாரம் மற்றும் ஆன்மிக ஒற்றுமை தான்" எனத் தெரிவித்தார் ஆளுநர்.

தமிழ்நாடு ஆளுநர் எதையாவது பேசி, நாள் தோறும் ஏடுகளில் தன் பெயர் வெளிவரவேண்டும் என்பதில் குறிப்பாக, ஆர்வப் பெருக்கராக இருப்ப தாகத் தெரிகிறது. 

திருக்குறள் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில் உள்ளவர். திருக்குறளின் ஆழத் திற்குச் சென்று, ஆய்வு செய்து முத்தெடுத்தவர் போலப் பிளந்து கட்டுகிறார். 

இப்பொழுது திராவிடத்தைப் பற்றிப் பேசுகிறார். ஆரியமாவது திராவிடமாவது - எல்லாம் வெள்ளைக் காரன் அவிழ்த்துவிட்ட கரடி என்று பேசிய வட்டாரத் தைச் சேர்ந்த ஆளுநர் ரவி இப்பொழுது திராவிடம் என்றால், தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா இவற்றை  உள்ளடக்கியதுதான் திரா விடம் என்கிறார். இப்பொழுது திராவிடம் என்றால் தமிழ்நாடு என்றாகி விட்டது என்று கவலைப்படுகிறார்.

ஆளுநர் ரவிக்கு ஒரு வரலாறு தெரியுமா? 

ஒரு காலத்தில்இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள்தாம். சிந்து சமவெளி நாகரிகம், திராவிட நாகரிகமே என்று அய்ராவதம் மகாதேவன் வரை ஒப்புக் கொண்டுள்ளனர். அசாமில் வாழ்ந்தவர்கள் திரா விடர்கள் என்கிறார் அறிஞர் அண்ணல் அம்பேத்கர். 

ஆளுநருக்கு அல்ல, அவருக்குச் சொல்லி என்ன ஆவப்போவது - ஒன்றுமில்லை!

ஆளுநர் போல காரிருளில் புலம்புவோர் தெரிந்து கொள்வதற்காகச் சிலவற்றை எடுத்துச் சொல்லுவது நலம் தரும் என்பதால் சில இங்கே:

சிந்து சமவெளி - திராவிடர் நாகரிகமே! 

தமிழகத்தில் புதிய கற்கால கோடரி - கண்டுபிடிப்பு.

சிந்து சமவெளி நாகரிக எழுத்துகளுடன் புதிய கற்காலக் கோடரி தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

நம் நாட்டில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல் ஆயுதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரின் எழுத்துத் தொன்மையை உறுதிப் படுத்தும் மிகச் சிறந்த சான்று இது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் செம்பியன்  கண்டியூரில், 2006ஆம் ஆண்டு பிப்ரவரி யில் மேற் கொண்ட கள ஆய்வில் இரண்டு புதிய கற்காலக் கைக்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டன.  அவற்றில் ஒன்றில் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட (கி.மு.1500) மொஹஞ்சதாரோ - ஹரப்பா பண்பாட்டுக் கால எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது தெரிய வந்து உள்ளது என்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சிறப்பு ஆணையர் சிறீதர் தெரிவித்தார்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவில் பேசிய அவர், இதுகுறித்து கூறியது இதுவரை 1இதுபோன்ற குறியீடுகள் தமிழகப் பாறை ஓவியங்களிலும் இரும்புக்கால ஈமச்சின்னங்களில் இருந்து கிடைத்த பானை ஓடுகளிலும் மட்டுமே கிடைத்துள்ளன.

தற்போது கற்கருவி கிடைத்த செம்பியன் கண்டியூரில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த தாழிகள். கருப்பு - சிவப்பு மட்கலன்கள், குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகள். சாம்பல் நிற மட்கலன்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன.

கருவியில் நான்கு பொறிப்புகள் உள்ளன. முதற் பொறிப்பு பீடத்தில் அமர்ந்த நிலை யில் உள்ள மனித வடிவுடையதாகவும்., அடுத்த பொறிப்பு கோப்பை வடிவிலும், மூன்றாவது பொறிப்பு ஏறத்தாழ முத்தலைச் சூலம் போன்ற அமைதியிலும், நான்காவது பொறிப்புக் குத்திட்ட பிறை வடிவின் நடுவில் ஒரு வளையத்தை இணைத்தது போலவும் உள்ளது.

தொல்லியல் ஆய்வாளர் அய்ராவதம் மகா தேவன் ஆய்வின்படி முதலிரு பொறிப்புகளுக்கும் முரு என்றும் அன் என்றும் பொருள் கொள்ளலாம்.

புதிய கற்காலக் கற்கருவியில் இவ்வெழுத்துப் பொறிப்புகள் கிடைத்ததன் மூலம். புதிய கற்காலத் தமிழக மக்கள் ஹரப்பா பண்பாட்டு மற்றும் நாகரிகக் கூறுகளைத் தொடர்ந்து பின்பற்றிய வர்கள் என்பது உறுதியாகிறது என்கிறார் சிறீதர்.

சிந்துவெளி எழுத்துகள்

'இக்கண்டுபிடிப்பின் மூலம் சிந்துவெளி நாகரி கமும். தொல் தமிழ் நாகரிகமும். திராவிட நாகரிகம் என உறுதி செய்யப்பட்டுள்ளது' என்று 'தினமணி'யின் மேனாள் ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான அய்ராவதம் மகாதேவன் தெரிவித்தார்.

‘தமிழ்நாட்டில் சிந்துவெளி எழுத்துகள் பொறித்த ஒரு கற்கால கருவி' என்பது தான் இக்கண்டுபிடிப்பின் முக்கியத்துவமாகும். இப்புதிய கற்காலக் கருவி சுமார் கி.மு.1500-க்கு முற்பட்ட காலத்தில் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். கி.மு.1000-த்துக்குப் பிறகு, இரும்பு வந்த பிறகு இக்கருவிகள் உருவாக்கப்பட வில்லை. ஒரு பீடத்தில் உட்கார்ந்து இருக்கும் உருவத்தை அக்காலக் கடவுள் என்றும், அது முருகனைக் குறிக்கிறது என்றும் கூறுகிறார் அவர்.

இதே உருவங்கள் பொறித்த பெருங்கற்கால பானைகள் திண்டிவனம், சானூர், திருநெல்வேலி, மாங்குடி, கேரளத்தில் முசிறி ஆகிய இடங்களிலும் கிடைத்துள்ளது என்று அய்ராவதம் மகாதேவன் தெரிவித்தார்.

(‘தினமணி', 2.5.2006)

(குறிப்பு: சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே என்று பொய்ப் பிரச்சாரம் செய்யும் பார்ப்பனர்களுக்கு இந்த ஆதாரம் மரண அடியாகும்).


No comments:

Post a Comment