ஓட்டுநர் உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

ஓட்டுநர் உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

சேலம் நவ.16 சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் மூலமாக 80 சதவீத பணிகள் நடக்கின்றன.   தமிழ்நாட் டில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக  இரு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப் பினரும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் பெறுவது கட்டாயம் ஆகும். அதாவது, 18 வயது முடிந்திருந்தால்  கியர் வாகனங்கள் (மோட்டார் சைக்கிள், ஸ்கூட் டர்கள்) ஓட்டலாம். அதேபோல், இலகு ரக வாகனங்கள் (கார், ஜீப்) ஓட்டுவதற்கு உரிமம் பெறலாம். ஆனால் இப்போது பலபேர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மொபட் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்வதை காண முடிகிறது. இது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஆபத்து வரும்வரை உணரமாட்டார்கள். ஏகப்பட்ட படிவங்களை நிரப்ப வேண்டும். கால்கடுக்க ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வரிசையில் நிற்க வேண்டும் என்று தாங்களாகவே ஏதேதோ கற்பனை செய்து கொண்டு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள்.

18 வயது முடிந்திருந்தால் ஓட்டுநர் உரிமம் பெற ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி சான்றிதழ், எந்த வகையான ரத்தம் என்பதற்கான சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4 போன்றவை தேவைப்படும். இதற்கு முன்பு பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் ஆகியவை பெறுவதற்கு சம்பந்தப் பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால் கரோனா பரவலுக்கு பின்பு வாகன ஓட்டுநர் உரிமம் பெற நேரடியாக சென்று காத்திருக்க வேண்டியதில்லை. இணையம்  மூலமாகவே இருசக்கர மற்றும் நான்கு சக்கர ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசின் www.parivahan.in என்ற இணையதளம் மூலம் விண்ணப் பிக்க வேண்டும்.  வைத்திருப்பவர்கள் அதன் மூலமாகவே விண்ணப் பிக்கலாம். திறன் பேசியை பயன்படுத்த முடியாதவர்கள், படிக்க தெரியாதவர்கள் இருந்தால் அவர்கள் கணினி மய்யங்களுக்கு  சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான கட்டணமும் இணையம் மூலமாகத்தான் செலுத்த வேண்டும். அதன்பிறகு பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெற்றுக்கொள்ளலாம்.


No comments:

Post a Comment