கலியுகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

கலியுகம்!

கேள்வி: நேர்மையான ஏழையை சமூகம் மதிப்பதில்லை. அக்கிரமம் செய்யும் பணக்காரனை சமூகம் மதிக்கிறதே, ஏன்?

பதில்: அதுதான் கலியுகம்.

கலியுகத்தில் பணம், அதிகாரம் உள்ளவர்களுக்குத்தான் அதிக மதிப்பு என்கிறது பாகவத புராணம்.

- ‘துக்ளக்', 30.11.2022, பக்கம் 8

அவாள் நம்பிக்கைப்படி கலியுகம் என்பதை உண்டாக்கிய கடவுள்தானே குற்றவாளி. 

கலியுகம் என்பது  4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாம். 

திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளாம். 

கிருத யுகம் 17,28,000 ஆண்டுகள் கொண்டதாம், 

துவாபரயுகம் 8,64,000 ஆண்டுகள் கொண்டதாம்.

கலி முற்றி அதர்மங்கள் தலைவிரித்தாடுமாம்! இப்பொழுது இந்திய ஒன்றியத்தை ஆளும் நரேந்திர மோடியின் ஆட்சியில் அதர்மங்கள் தலைவிரித்தாடும் என்பதைத் ‘துக்ளக்' அய்யன்மார்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். ஒப்புக்கொள்வது என்ன? ஒப்புக்கொண்டு விட்டார்களே!

கலியுகத்தில் இது இருண்ட காலமாம். அவாளின் நம்பிக்கைப்படி இப்பொழுது நடக்கும் ஆட்சி ‘இருண்ட கால ஆட்சி' என்று குருமூர்த்தி அய்யர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அக்கிரமம் செய்யும் பணக்காரனை சமூகம் மதிக்கிறது என்கிறார் அய்யர். இருண்ட கால ஆட்சியான மோடியின் அரசில் அதானிகளும், அம்பானிகளும்தானே கொழிக்கிறார்கள்.

அம்பானி கையில் டெலிகாம்; அதானி கையில் துறைமுகம்; டாடா கையில் ஏர்ஃபோர்ட், அரசு கையில் ராமர் கோவில், மக்கள் கையில் திருவோடு என்பதுதானே கலியுக மோடி ஆட்சி.

இந்த ஆட்சிமீது குருமூர்த்திக் கும்பலுக்குக் கோபமா அல்லது சாபமா?

எப்படியோ, அவர்களின் நம்பிக்கை சார்ந்து குட்டு உடைக்கப்பட்டு விட்டதே!


-  மயிலாடன்


No comments:

Post a Comment