சத்தியமங்கலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!
கோபி, நவ. 23 தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, வடக்குப்பேட்டை சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார்.
தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் திராவிடர் கழக முதல் பொருளாளர், பழைய கோட்டை இளைய பட்டக்காரர் தளபதி
ந.அர்ச்சுணன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், நேற்று (22.11.2022) மாலை 5 மணிக்கு வடக்குப் பேட்டை சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம் தலைமை ஏற்க, மாவட்டச் செயலாளர் மு.சென்னியப்பன் வரவேற்புரை ஆற்றி னார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், திராவிடர் கழக காப்பாளர் இரா.சீனிவாசன், சத்திய மங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் கே.சி.பி. இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பி. எல். சுந்தரம், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.வி.சரவணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜீவா ஓ.சுப்பிர மணியன், திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப் பாளர் கே. கே. செல்வன், கோபி நகர தி.மு.க. மேனாள் செயலாளர் வெ. மணிமாறன், ஆதித்தமிழர் பேரவை செயலாளர் பொன்னுச்சாமி ஆகியோர் தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் வாழ்த்துரை வழங்கினர். திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் புத்தகங்களை அறிமுகப்படுத்தி பேசினார்.
அதைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் பகுதி யில் நடைபெற்ற, பெரியார் ஆயிரம் வினா - விடைப் போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள், பரிசு வழங்கி சிறப்பித்தார்.
இறுதியாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், தான் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து பேசியதாக நீதிக் கட்சியில் தொடங்கி, இன்றைய நீட் தேர்வு வரையிலும் திராவிடர் இயக்கத்தின் வர லாற்றை மக்களுக்கு ஒரு வகுப்பு ஆசிரியரைப் போல சொல்லிக் கொடுத்தார்.
சத்திய மங்கலம் நகர மன்றத் தலைவரும், தி.மு.க. செயலாளருமான ஜானகி அம்மாள் அவர்கள் தமிழர் தலைவரை வரவேற்று உயர்தர ‘‘டார்ச் லைட்டை'' வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், பதவிக்கு ஆசைப்படாத திராவிடர் கழகம் ஏன் இதை பேசுகிறது? என்று கேள்வி கேட்டு, ஜாதி, மதம், மூட நம்பிக்கைகள் நம் மக்கள் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருக்கின்றன. ஆகவே, மனித உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக திராவிடர் இயக்கம் போராடு கிறது. தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியபோது, அதற்கான நோக்கமாக அவர் சொன்னது "அனைவருக்கும் அனைத்தும்" இதைத் தான் "திராவிட மாடல்" என்று இன்றைக்கு குறிப்பிடுகி றோம். இதைத்தான் நமது சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல் லுகிறார் என்று திராவிடர் இயக்கத்தின் வரலாற்றுப் போக்கில் இதைக் குறிப்பிட்டார்.
நிகழ்வின் தொடக்கத்தில் புதுகை பூபாளம் குழு வினர் இன்றைய சமூக அரசியலை நகைச்சுவையாக பாடியும் நடித்தும் காட்டினர்.
நிகழ்வில் மண்டல செயலாளர் பெ.ராஜமாணிக்கம், மாவட்டத் துணைச் செயலாளர் சு.பாட்டுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் கா.யோகானந்தம், சக்தி ஒன்றிய செயலாளர் ஜி.கே.மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சு.மோகன்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மிசா. தங்கவேல், திராவிடர் கழக மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் வேலுச்சாமி, கோவை மாவட்ட தலைவர் மா.சந்திரசேகர், பெரியார் மருத்துவக் குழும தலைவர் டாக்டர் மருத்துவர் கவுதமன், நீலமலை மாவட்ட செயலாளர் நாகேந்திரன், பெரியார் பெருந் தொண்டர் சக்தி எழில் சி.பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பெருவாரி யான மக்கள் திரண்டு வந்து பயன் பெற்றனர். பாது காப்புப் பணிகளில் காவல்துறையினர் சிறப்பாக ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment