தருமபுரி மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

தருமபுரி மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு

 90 இடங்களில் தெருமுனைக் கூட்டம் பொதுக்கூட்டங்களை நடத்திட சிறப்புத் தீர்மானம்

தருமபுரி, நவ. 24- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் மாவட்ட கழக தலைவர் வீ.சிவாஜி தலைமையில் நடைபெற்றது. மாணவர் கழக தோழர்  கு.அரிகரன் கடவுள் மறுப்பு கூற, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் பெ.கோவிந்தராஜ் வர வேற்புரையாற்றினார். 

திராவிடர் கழக மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர். தமிழ்ச் செல்வி, மாநில கலைத்துறை செய லாளர் மாரி. கருணாநிதி,  மண்டல கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் க.கதிர் ஆகி யோர் முன்னிலை ஏற்று கருத்துரை யாற்றினர். கலந்துரையாடல் கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள்.    

தீர்மானம் 1: கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  மாவட்டம் முழுவதும் இனிப்பு வழங்கியும், பதாகைகள் வைத்தும், துண்டறிக்கை வெளியிட்டும், சுவரொட்டி ஒட்டியும், தமிழர் தலைவரின் 80 ஆண்டு கால இயக்கப்பணி, விடுதலைப் ஆசிரியர் பணி, சமூக நீதிப் பயணம்,  போராட்ட வரலாறு ஆகியவைகளை தொகுத்து துண்டறிக்கையாக தயாரித்து  மாவட்டம் முழுவதும் பொது மக் களுக்கு வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 2: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது பிறந்த நாளை யொட்டி அதனை சிறப்பிக்கும் வகையில் ஒன்றியங் களில் உள்ள கிராமங்கள் தோறும் மாவட்டத்திலுள்ள கழக சொற்பொழி வாளர்களை வைத்து தெருமுனை  கூட்டங்களை நடத்துவது எனவும், தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், இண்டூர், பாப்பாரப்பட்டி, பாலக் கோடு, மாரண்டஹள்ளி, காரிமங் கலம், கரும்பைநல்லூர், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம் மிடி, கடத்தூர், நரிப்பள்ளி, அரிய குளம்,ஆகிய  பேரூர்களில் கழக சொற்பொழிவாளர்களை அழைத்து மொத்தம் 90 கூட்டங்களை இரண்டு மாத காலத்தில் நடத்துவது - எனவும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட் டுள்ளது.

கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டோர்:

திராவிடர் கழக  மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் 

மா.செல்லதுரை, மாவட்ட கழக இளைஞரணி தலைவர் த.மு.யாழ் திலீபன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ், செயலாளர் ம.சுதா, பாப்பாரப்பட்டி நகர தலைவர் சுந்தரம் மாவட்ட விவசாய அணி தலைவர் மு.சிசுபாலன், இண்டூர் நகரத் தலைவர் கோவிந்தராஜ், மாரவாடி கிளை தலைவர் ஊமை.காந்தி, கடத்தூர் விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர் கோ.தன சேகரன் ஆகியோர் கலந்து கொண் டனர்.   இறுதியாக மாவட்ட மாணவர் கழகப் பொறுப்பாளர் வினோத் குமார் நன்றி கூறினர். 

No comments:

Post a Comment