விழுப்புரம் கப்பூரில் இளம் தோழர்களுடன் எழுச்சிமிக்க சந்திப்பு ‘விடுதலையின் வளர்ச்சி-இனத்தின் எழுச்சி!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

விழுப்புரம் கப்பூரில் இளம் தோழர்களுடன் எழுச்சிமிக்க சந்திப்பு ‘விடுதலையின் வளர்ச்சி-இனத்தின் எழுச்சி!'

கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் முழக்கம்

கப்பூர்,நவ.24 விழுப்புரம் கப்பூரில் 21.11.2022 அன்று மாலை 4 மணி அளவில் ''புதிய சிறகுகள்'' காவலர் பயிற்சி மய்யத்தில் பயிற்சி பெறும் இளைஞர்கள் மத்தியில் கலந்துரை யாடல் கூட்டம் மய்யத்தின் நிறு வனர் சிவராஜ் தலைமையில் நடை பெற்றது 

கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் 'விடுதலை'சந்தா சேர்க்கையின் அவசியத்தை வலியுறுத்தும் வகை யில் பொது அறிவு வளர 'விடு தலை'யை ஒவ்வொரு இளைஞரும் வாசித்துப் பழக வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி விளக்கம் தரும் வகை யில் 'விடுதலை'யின் வளர்ச்சி இனத்தின் எழுச்சி' தலைப்பில் ஒரு பகுதி உரையும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் மற்றொரு பகுதி உரையும் ஆக ஒன்றரை மணி நேரம் இளைஞர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் சிறப்புரை ஆற்றினார்.

முடிவில் 'விடுதலை' ஏட்டை வாங்கிப் படிக்கும் ஆர்வத்தோடு சந்தா சேரும் உணர்வு படைத்தவர் கள் கை உயர்த்தலாம் என்று கேட்டுக் கொண்டார்.

அய்ம்பதுக்கும் மேற்பட்ட இளம் தோழர்கள் கை உயர்த்தி தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். மய்யத்தின் நிறுவனர் சிவராஜ் பெரியார் - அம்பேத்கர் பாதையில் பயணித்து வெற்றியின் படிக்கட்டை தாம் தொட்டது குறித்து விளக்கிப் பேசினார்.

மொத்தத்தில் இக்கூட்டம் இளை ஞர்களுக்கு புதிய உற்சாகத்தை எழுச்சியை ஊட்டுவதாக அமைந் தது - 'விடுதலை' ஏட்டுக்கு நேசக் கரம் நீண்டது.

No comments:

Post a Comment