சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்

சேலம், நவ.19- சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரை யாடல் கூட்டம் 08.10.2022 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு  சேலம் அம்மாபேட்டை நந்தா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ.ரமேஷ் தலைமை ஏற்றார். சேலம் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி 

ப. கந்தவேல் வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர் பகுத்தறிவாளர் கழகம்),  வி.மோகன் (மாநில பொதுச்செயலாளர் பகுத்தறி வாளர் கழகம்),  அண்ணா.சரவணன் (மாநிலத் துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), மாநில கலைத்துறை தலைவர் மாரி கருணாநிதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில்  ஜவகர் (மாவட்ட காப்பாளர் திரா விடர் கழகம்),  அ.ச. இளவரசன் (தலைவர் சேலம் மாவட்ட திராவிடர் கழகம்), ப. வைரம் செயலாளர் (சேலம் மாவட்ட திராவிடர் கழகம்), அரங்க.இளவழகன் (தலைவர் சேலம் மாநகர திராவிடர் கழகம்), கா.நா.பாலு (செயலாளர் மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகம்), கோவி. அன்புமதி (தலைவர் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்), ஓமலூர் சவுந்தரராசன் (பொதுக்குழு உறுப்பினர் திராவிடர் கழகம்), சி.மதியழகன் (பகுத்தறிவாளர் கழக செய லாளர், மேட்டூர் மாவட்டம்),  அ.இ.தமிழர் தலைவர் (சேலம் மாவட்ட இளைஞரணி திராவிடர் கழகம்), பழ. பரமசிவம் (மாவட்டத் துணைத் தலைவர் திராவிடர் கழகம்),  போலீஸ் ராஜூ (மாவட்ட மாநகர துணைச் செயலாளர் திராவிடர் கழகம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இரா.வீரமணி ராஜு நன்றியுரை ஆற்றினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்டவர்கள் புதிய பொறுப் பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்

பகுத்தறிவாளர்கள் கழக மாவட்டத் தலைவர் இரா.வீரமணி  ராஜு, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பெ.ரமேஷ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் ஆசிரியர் செல்வ ராஜ், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்டத் தலைவர் ப.காந்தவேல், மாவட்ட கலைத் துறை அமைப்பாளர்  தங்கராசு.

கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் மற்றும் திராவிடர் கழக தோழர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment