புதுடில்லி, நவ. 14- டில்லியில் 12.11.2022 அன்று நடை பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பேசியதாவது.
லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்களின் எண் ணிக்கை குறைக்கப்பட வில்லை. அதோடு அந்த நாடு எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதி களை அதிகரித்து வருகி றது. எனவே எல்லையில் கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. கிழக்கு லடாக் எல்லையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அரசியல், ராணுவ ரீதியாக இந்தியா, சீனா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடை பெறுகிறது. 7 எல்லைப் பகுதிகளில் கருத்து வேறு பாடுகள் ஏற்பட்டன. இதில் 5 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கி றது. 2 எல்லைப் பிரச்சி னைகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
இந்திய தரப்பில் லடாக் எல்லைப் பகுதிகளில் புதிதாக விமான தளம், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment