போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி என்னவாயிற்று? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி என்னவாயிற்று?

ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி

புதுடில்லி, நவ.21 பயிர்களின் உற்பத்தி செலவுடன் 50 சதவிகிதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) நிர்ணயிக்கப்படும் என்று அளித்த வாக்குறுதி என்னவானது என்று பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில் லியை முற்றுகையிட்டு விவசாயிகள் சுமார் ஓராண்டுக்கு மேல் போராட்டம் நடத்தினர். இறுதியாக 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியாகி  ஓராண்டு நிறைவடைந்தது. இதனை நினைவுகூர்ந்து ட்விட்டரில் கார்கே வெளியிட்ட பதிவில், ‘விவசாயிகளுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். விவசாயிகள் போராட்டத்தில் 733 விவ சாயிகள் உயிரிழந்தனர். அவர்களுக்கு ஒன்றிய அரசு எவ்வித இழப்பீடும் அளிக்கவில்லை. விவசாயிகள் மீது பதிவு செய்த வழக்குகளையும் திரும்பப் பெறவில்லை. பயிர்களின் உற்பத்தி செலவுடன் 50 சதவிகிதம் கூடுதலாக சேர்த்து குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என்று பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு வாக்குறுதி அளித்தது. அது என்னவா னது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


No comments:

Post a Comment