கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த மறைந்த பெரியார் பெருந்தொண்டர் மானமிகு சந்தானகிருட்டினன் அவர்களின் மகனும், குளித்தலை நகர திராவிடர் கழகச் செயலாளரும், கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் ஈடுபட்டவரும், சீரிய செயல்வீரருமான மானமிகு செல்லதுரை (வயது 67) அவர்கள் நேற்று (22.11.2022) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். குடும்பத் தலைவரை இழந்து ஆறாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரது வாழ்விணையருக்கும், மகனுக்கும் கழகத்தின் சார்பில் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
23.11.2022