ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* குஜராத்தில் மோர்பி பாலம் சோகத்திற்கு அரசு முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். அவர்கள் கூறும் ‘இரட்டை என்ஜின்’ (மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி) முற்றிலும் செயலிழந்து விட்டது என உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே குற்றச்சாட்டு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மேற்கு வங்கத்தில் பாலம் இடிந்த போது, இது கடவுளின் செயல் அல்ல; மோசடி செயல் என மோடி பேசியதை சுட்டிக்காட்டி, ‘இது கடவுளின் செயலா அல்லது மோசடி செயலா?’, குஜராத் பாலம் இடிந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் செய்தி.

தி டெலிகிராப்:

* ஆர்எஸ்எஸ்-பாஜக அரசியல் என்பது பயத்தில் இருந்து உருவானது. அதை எதிர்ப்பது தான் தனது நடைப் பயணத்தின் நோக்கம் என்கிறார் ராகுல் காந்தி

* ஜனநாயகத்தின் தரத்தை மதிப்பிடுவதில் கொள்கை வகுப்பதில் குடிமக்கள் பங்கேற்பு ஒரு முக்கிய காரணியாகும். அக்னிபாத் அறிவிக்கப்பட்ட அய்ந்து நாட்களுக்குள், திட்டம் 10 முறை திருத்தப் பட்டது. கொள்கை வகுப்பதில் ஆலோசனை பற்றிய பெரிய கேள்வியை எழுப்பியது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, 43 நாட்களில் 60 மாற்றங்களைக் கண்ட பணமதிப் பிழப்பு நடவடிக்கை; 10 மாதங்களில் 376 முறை திருத்தப்பட்ட ஜிஎஸ்டி; விவசாயச் சட்டங்கள் ஒரு வருடம் கழித்து ரத்து செய்யப்பட்டது வரை பல கொள்கை முடிவுகளை மக்கள் ஆலோசனையின்றி ஒன்றிய அரசு எடுத்துள்ளது என பத்திரிகையாளர்கள் நம்ரதா ஜெப், ராஜேஷ் ரஞ்சன் கருத்து.

* மு.க.ஸ்டாலினின் துரித நடவடிக்கை கோவை குண்டுவெடிப்புக்குப் பிறகு அமைதியை உறுதிப் படுத்துகிறது. குண்டுவெடிப்பை பிளவுபடுத்தும் மற்றும் உணர்ச்சிகரமான பிரச்சினையாக மாற்றும் பாஜகவின் முயற்சிகளை முறியடிக்கும் நடவடிக்கை களை தமிழ்நாடு விரைவாக மேற்கொண்டது என பத்திரிகையாளர் எம்.ஆர்.வெங்கடேஷ் கருத்து.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment