ராகுல் காந்தி நடைப்பயணத்தில் பிரியங்கா காந்தி குடும்பத்துடன் பங்கேற்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 25, 2022

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் பிரியங்கா காந்தி குடும்பத்துடன் பங்கேற்பு!

போபால், நவ. 25 இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி நடைப் பயணத்தை தொடங்கினார். தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளா, கருநாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராட்டிரா என ராகுல் காந்தி நடைப் பயணத்தை  மேற்கொண்டு வருகிறார். 

கடைசியாக குஜராத்தில் நடைப் பயணம் முடிவடைந்த நிலை யில், நேற்று (24.11.2022) காலை மத்தியப் பிரதேச எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து நடைப் பயணம் தொடங்கியது. இரு மாநில எல்லையில் உள்ள போடர்லி என்ற கிராமம் வழியாக மத்தியப் பிரதேசத் துக்கு வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்தியபிரதேசத்தில், ராகுல்காந்தி நடைப் பயணம் 12 நாட்கள் நடக்கிறது. அங்கு 380 கி.மீ. தூரம் நடைப்பயணம் செல்கிறார்கள். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்தியப் பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது. இந்த நடைப் பயணத்தில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரி யங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் இணைந்து நடைப்பயணம் மேற்கொண்டு வருகின் றனர். மேலும் பிரியங்கா காந்தி மகன் ரைஹான் வத்ராவும் நடைப் பயணத் தில் இணைந்துள்ளார்.


No comments:

Post a Comment