டிசம்பர் 7 முதல் 29 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒன்றிய அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 20, 2022

டிசம்பர் 7 முதல் 29 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடில்லி, நவ .20 நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நடப்பு ஆண்டில் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடக்கும் என ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார். இந்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நடப்பு ஆண் டில் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறும். 

வரவிருக்கிற குளிர்கால கூட்டத் தொடரில் மொத்தம் 17 பணி நாட்கள் இருக்கும் என தெரிவித்து உள்ளார்.  விவா தங்கள் இருக்கும் என்றும், ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெறும் என எதிர்பார்க் கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இந்த கூட்டத்தொடரின் முதல் நாள், உறுப்பினர்களின் மறைவை யொட்டி ஒத்தி வைக்கப்படும் என பார்க்கப்படுகிறது. கரோனா பெருந்தொற்று எண்ணிக்கை குறைந்த சூழலில், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முழு அளவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்ட நிலையில், பெரிய அளவில் கரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி கூட்டம் நடை பெறும் என நாடா ளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment