சென்னை,நவ.12- சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி 9.11.2022 அன்று வெளியிட்டது.
மொத்தம் 38 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சியின் துணை ஆணையருமான விஷு மகாஜன் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் வெளியிட்டார்.
செய்தியாளர்களிடம் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் விஷு மகாஜன் கூறியதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தர வின்படி, சென்னையில் உள்ள 16 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு ஜன. 1ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 2023ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மய்யங் களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக் காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் அடுத்தாண்டு ஜன.1ஆம் தேதி 18 வயது நிறைவு பெறுபவர்கள் (1.1.2005ஆம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் 17 வயது நிரம்பி அடுத்தாண்டு 30.9.2023 வரை 18 வயது பூர்த்தி அடையும் நிலையில் உள்ளவர்களும்) படிவம் 6-அய் பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-அய் பூர்த்தி செய்தும், சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், மேலும் வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய படிவம் 8-அய் அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் 3,723 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப் படுகிறது. அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 284 வாக்குச் சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 169 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு, ஏற்கெனவே கடந்த ஜன.5ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 20,04,860, பெண் வாக் காளர்களின் எண்ணிக்கை 20,74,616, இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 1,102 என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 40,80,578.
அதன் அடிப்படையில், நடந்து முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னையில் 19,15,611 ஆண் வாக்காளர்கள், 19,75,778 பெண் வாக்காளர்கள் மற்றும் 1,058 இதர வாக்காளர்கள் என மொத்தம் 38,92,457 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற் றுள்ளது. மேலும், 1,01,483 ஆண் வாக் காளர்கள், 1,13,343 பெண் வாக்காளர்கள் மற்றும் 94 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,14,920 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1,72,211 வாக் காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 3,05,994 வாக் காளர்களும் உள்ளனர்.
-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment