10 சதவிகித இடஒதுக்கீடு : உச்சநீதிமன்ற தீர்ப்பு சமத்துவம் என்ற கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

10 சதவிகித இடஒதுக்கீடு : உச்சநீதிமன்ற தீர்ப்பு சமத்துவம் என்ற கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது

சுஹிர்த் பார்த்தசாரதி

அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்படு வார்கள் என்பதற்கு உறுதி அளித்திருக்கும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை சிதைக்கும்படியான ஏராளமான தீர்ப்புகளை, உச்சநீதி மன்றம் அதன் 70 ஆண்டு வரலாற்றில் அளித்துள்ளது.

அரசமைப்பு சட்டத்தின் பொருள் மற்றும் மதிப்பீடுகள் பற்றி பல்வேறுபட்ட அர்த்தங்களை அளிக்கும், ஒன்றுக்கொன்று முரணாக விளங்கும் பல்வேறுபட்ட தீர்ப்புகளை, பல்வேறுபட்ட அமர்வுகள் அவ்வப்போது அளித்து வந்துள்ளன. 

இத்தகைய முரண்பாடுகளில் சில புரிந்து கொள்ள முடிவதாக இருப்பவையாகும். சமமாக நடத்தப்படுவது, தனிப்பட்ட சுதந்;திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம், மத சுதந்திரம் ஆகியவை அரசமைப்பு சட்டம் அளித்துள்ள உறுதி மொழி களில் மிகமிக முக்கியமானவை ஆகும். அவை சுருக்கமான மொழியில் மூடி வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் உண்மையான அர்த்தத்தைத் தோண்டி வெளியே கொண்டு வந்து அவற்றுக்கு விளக்கம் தரும் பணி நீதிமன்றங்களைச் சேர்ந்தவையாகும்.

சட்டவிதிகளை மட்டும் பார்க்காமல், அரச மைப்பு சட்டத்தின்; வரலாற்;றைப் படித்து, அதன் மிக அருமையான நீதி ஒழுக்கக் கண்ணோட் டத்துடன், அவற்றின் முன் மாதிரிகளை கருத்தில் கொண்டு, சட்டவிதிகளைப் பின்பற்றும் மகத்தான பணியை நீதிபதிகள்; ஆற்றுகின்றனர். அரச மைப்பு சட்டம் அளித்துள்ள உறுதிமொழிகளைப் பற்றி விளக்கம் அளிக்கும்போது, அந்த ஆவணம் எவ்வாறு படிக்கப்பட வேண்டும் என்பது பற்றி நீதிபதிகள் மாறுபட்ட முடிவுகளுக்கு வருவது இயல்பானதே. அரசமைப்பு சட்டத்தின் அடிக் கட்டுமானத்தின் பகுதியாக இருப்பதற்கான தகுதி போன்ற அம்சங்களுக்கு விளக்கம் அளிக்க கேட்டுக் கொள்ளப் படும்போது, இத்தகைய முரண்பாடுகள் சிறப்பான ஒரு கவனத்தைப் பெறுகின்றன. 

தகுதிநீக்கமும் பாகுபாடு காட்டலும்

ஜான்ஹிட் அபயானுக்கும் இந்திய அரசுக்கும் இடையே  2022 நவம்பர் மாதத்தில் நடந்த வழக்கின் தீர்ப்பில், நீதிபதி எஸ்.ரவீந்திரபட் கொண்டிருந்த அவரது ஆற்றல் மிகுந்த மாறுபட்ட கருத்தின்படி, சமத்துவத்துக்கான உரிமையின் இதயம் போன்ற சில குறிப்பிட்ட நியாயமான கோட்பாடுகளை நீதிமன்;;றம் சுட்டிக் காட்டியுள்ளது. அவற்றில் ஒன்றுதான், ஜாதி அல்லது சமூக அடிப்படையில், இந்த இடஒதுக் கீட்டின் பயன் பெறுவதில் இருந்து தகுதி நீக்கம் என்ற கருத்து அனுமதிக்கப் பட இயலாதது என்பது. ஆனால், இன்று, இந்த விதி மாற்றப் பட்டுள்ளது.

"எழுபது ஆண்டு குடியரசு ஆட்சியின் வரலாற்றில் முதன்முதலாக, மிகக் கொடுமையான முறையில் தகுதி நீக்கம் செய்வதற்கும்;, பாகுபாடு காட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று பட் கூறியபடி அரசமைப்பு சட்ட 103 ஆவது திருத்தம் செல்லும் என்ற தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

"பொருளாதார அளவில் பின் தங்கி இருக்கும் மக்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்ப தற்கு அரசுக்கு அதிகாரம் அளிக்கும் அரசமைப்பு சட்ட 15, 16 பிரிவுகளுக்கான திருத்த மசோதா 

2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில்; அறிமுகப் படுத்தப்பட்டது. அத்துடன் இந்த இட ஒதுக் கீட்டினைப் பெறுவதற்கு ஏற்கெனவே இட ஒதுக்கீடு பெற்றுவரும் தாழ்த்தப்பட்ட, பழங் குடியின, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு  தகுதி இல்லை என்றும், உயர்ஜாதியினருக்கு மட்டுமே அதனைப் பெறும் தகுதி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதி மன்ற 13 நீதிபதிகளின் அமர்வினால், கேசவானந்த பாரதிக்கும், கேரள அரசுக்கும் இடையேயான வழக்கில் 1973 இல் தீர்ப்;பு அளிக்கப்பட்டது முதல், அரசமைப்பு சட்டத்தைத் திருத்துவதற்கான நாடாளுமன்றத்தின் அதிகாரம் எல்லையற்றது அல்ல என்பது மிகத் தெளிவாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. திருத்தம் செய்வதற் கான அதிகார வரையறைகள் அரசமைப்பு சட் டத்தில் மறைமுகமாகவும், திருத்தம் என்ற சொல்லின் இலக்கிய அர்த்தத்தில் இருந்தும் தெரிகிறது என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஒரு திருத்த நடைமுறைக்குப் பின் நடைமுறைக்கு வரும் அரசமைப்பு சட்டம் அதன் அசல் அடை யாளத்தை இழந்துவிடுமேயானால், திருத்தசட்டம் சட்டத்திற்குப் புறம்பானது என்றே கருதப்படும். வேறு சொற்களில் கூறுவதானால்,  திருத்தம் செய்வதற்கான நாடாளுமன்றத்தின்; அதிகாரம் அரசமைப்பு சட்டத்தின்; அடிக் கட்டுமானத்தைக் குலைக்க முடியாது என்பதுதான். 

மனுதாரர்களின் வாதம்

ஜான்ஹிட் அபயானு வழக்கில், குறைந்தது இந்த 103 ஆவது அரசமைப்பு திருத்த சட்டம் மூன்று காரணங்களுக்காக அரசமைப்பு சட்டத் தின் அடிக்கட்டுமானத்தை மீறியிருக்கிறது என்ற வாதத்தை மனுதாரர்கள் முன் வைத்திருந்தனர்.

முதலாவதாக, தனிப்பட்ட ஒருவரின் வரு வாயை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு செய்வது என்பது, இடஒதுக்கீட்டுக்கான அசல் நியாயத்தைக் குலைப்பதாக இருக்கிறது. சமூகத்தின் கட்டமைப்பில் நிலவி வந்த சமத்துவ மின்மையைப் போக்கி, அதனால் ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்கு ஆக்கபூர்வமான செயல்பாடு தேவை என்ற புரிதலுடன் இணை சேர்ந்தது இந்த நியாயம் என்ற வாதத்தை அவர்கள் முன் வைத்தனர்.

இரண்டாவதாக, அரசமைப்பு சட்டத்தின் 15 மற்றும் 16 ஆவது பிரிவுகளின் கீழ் வருவாய் அடிப்படையில் வழங்;கப்படும் வேறு வழிகளி லான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு இந்த  வருவாய் அடிப்படையிலான இடஒதுக்கீட் டினைப் பெற இயலாது என்று விலக்கி வைப்பது என்பது பாகுபாடு காட்டப்படுவதாக இருக்கிறது.

மூன்றாவதாக, இடஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பு 50 சதவிகிதத்தைத் மீற முடியாது என்ற விதியை இந்த திருத்தம் குலைத்து விடுகிறது என்றும் சிலர் வாதாடினர்.

நீதிபதிகள் தினேஃ; மகேஸ்வரி, பேலா எம். திரிவேதி மற்றும் ஜே.பி. பர்திவாலா ஒவ்வொரு வரும் தங்களது பெரும்பான்மை தீர்ப்பினை தனித்தனியே எழுதி அளித்தனர். அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி யு.யு.லலித் நீதிபதி ரவீந்திர பட்டின் கருத்தை ஏற்றுக் கொண்டார்.

அரசியல் நிர்;வாகத்தில் நியாயமான பங்கு அளிக்கப்படாமல்,  வரலாற்று ரீதியில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் கோரிக்கையில் இருந்து எழும் நியாயத்தை இந்த முடிவு மறுப்பதாக ஆகிவிடுகிறது. 

அந்த வகையில், அடிப்படை சமத்துவத்தை நிலை நாட்டவும், கடந்த கால இழப்புகளுக்கு ஈடு செய்யவுமான ஒரு வழியாக இடஒதுக்கீடு எப்போதுமே பார்க்கப்பட்டுள்ளது. இந்தக் காரணத்தால்தான், இந்த்யீரா சஹானிக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே நடைபெற்ற வழக்கில் 1992ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பில், பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் என்று அடையாளம் காண்பதற்கு முழுவதுமான பொருளாதார நிலையை ஓர் அளவு கோலாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறப் பட்டுள்ளது.

என்றாலும்,  ஜான்ஹிட் அபியான் வழக்கின் தீர்ப்பில் பெரும்பான்மை நீதிபதிகள் "அரச மைப்பு சட்டம் சமத்துவத்தை வலியுறுத்துவதால், ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டில் நாடாளுமன் றத்தை  கட்டிப் போடமுடியாது" என்ற கார ணத்தை சுட்டிக் காட்டவில்லை. அதனால்,  முற்றிலும் பொருளாதார அடிப்படையில் ஒரு பகுதியினரை அடையாளம் காண்பது அடிப் படை சமத்துவத்தை மேலும் வளர்க்கும் என்ற முடிவுக்கு வந்து அதன்படி செயல்பட  இன்றைய அரசினால் இயலும். ஆக்க பூர்வமான செயல்பாட்டில் இன்னொரு அடுக்கை சேர்ப்பது மட்டுமே அரசமைப்பு சட்ட அடிப்படைக் கட்டு மானத்தை குலைத்து விடும் என்று கூறமுடியாது.

என்றாலும், அரசமைப்பு சட்ட 103 ஆவது திருத்தத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கும் போது, பழைய இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளின்படி இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெற்றவர்களை வேறு வழியில் திறந்த போட்டி என்ற பிரிவு மக்களாக வகைப்படுத்துவதை அரசமைப்பு சட்டம் சேர்க்கவில்லை. அதன் விளைவுதான் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டம் உருவானது. "நியாயமான வகைப்படுத்தல்" என்று இதனை பெரும்பான்மை தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஆதரித்துள்ளனர்.

"பொருளாதார அடிப்படையில் அளிக்கப் படும் இட ஒதுக்கீட்டுப்; பயன்களைப் பெறுவதில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத் தப்பட்ட பிரிவு மக்கள் சேர்க்கப்படாததால் மட்டுமே. இந்த திருத்தம் அரசமைப்பு சட்டத்தின் அடிக் கட்டுமானத்தைக் குலைத்துவிடுவதாகக் கூறமுடியாது" என்று நீதிபதி பர்திவாலா தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.

எதனை இந்தத் தீர்ப்பு 

பார்க்கத் தவறிவிட்டது?

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு, அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு சலுகையாக இல்லாமல், சமத்துவத்துக்கான உறுதி மொழியின் ஓர் இயல்பான பண்பாகவே இருப்பதாகும் என்பதை இந்தத் தீர்ப்பு பார்க்கத் தவறிவிட்டது. கேரள அரசுக்கும், என்.எம். தாமசுக்கும் இடையேயான வழக்கில் உச்ச நீதி மன்;றத்தின்; அய்ந்து நீதிபதிகள் அமர்வு 1975 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது முதல், இந்;த நிலைப்பாடுதான் நமது அரசமைப்பு சட்டத்தின் சிறப்புப் பண்பாக கருதப்பட்டு வருவதாகும். நீதிபதி பட் சுட்டிக்காட்டியபடி, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக் களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு சலுகை இலவச பயணச் சீட்டு அல்ல : அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்வதும், இழப்பீடு வழங்குவதுமே ஆகும்.  அதனால் கேசவானந்தா கோட்பாட்டின் பொருத்தமற்ற தன்மையை வைத்துப் பாரக்கும்போது,  இந்த 103ஆவது திருத்தம் அரசமைப்பு சட்டத்தின் அடிக்கட்டுமானத்தை குலைப்பதாகவே பார்க்கப் பட வேண்டும். மேலும் நீதிபதி பட் சுட்டிக் காட்டியபடி,  பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு தகுதி  பெற்றவர்கள் பட்டி யலில், நாட்டின் மக்கள்; தொகையில் 82 சதவி கிதம் அளவில் மிகப்பெரும்பான்மை மக்களாக விளங்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களையும் சேர்க்காமல இருப்பதால்  பொருளாதார நிலையில் பின்தங்கி யுள்ளவர்கள் அனைவரையும்  அது மேம் படுத்தவே  செய்யும் என்பதற்கான ஆவணங்கள் எதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதைப் பார்க்கும்போது இந்த திருத்தத்தின் நோக்கம் என்ன என்பது தெளிவாகவே தெரிகிறது.

ஆக்கபூர்வமான செயல்பாடு என்ற தற் போதுள்ள கோட்பாட்டை மாற்றி, திறந்த போட்டியாளர்களில் மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினராக இருக்கும் நம்மை சேர்க்காமல் ஓரங்கட்டி நமக்கு கைவிலங்கு மாட்ட வேண்டும் என்பதே அதன் நோக்கம்.;

இந்த நடவடிக்கைக்கு பின்னேற்பு அளித்த தின் மூலம், மக்களிடையே உண்மையான சமத்துவத்தை உருவாக்குவதற்கு எதிரான மிக மிகக் கொடிய வடிவிலான பாகுபாடு காட்டப் படுவதற்கு நீதிமன்றம் தவிர்ப்பு அளித்துள்ளது. இந்த நீதிமன்றத் தீர்ப்பு மாற்றப்படாமல் நடை முறைப்படுத்தப்பட்டால், அரசமைப்பு சட்ட குறும்புகள் நிறைந்த பெட்டியை அது திறந்து விட்டு விடும்.  

நன்றி: 'தி இந்து' 11.11.2022

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

 


No comments:

Post a Comment