உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என் பதை தமிழ்நாடு யாதவ மகாசபை எதிர்க்கிறது. யாதவ மகாசபை என்ற பெயரில் தவறாக யாரோ அறிக்கை கொடுத்துள்ளனர். யாதவ மகா சபைக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை என்று தமிழ்நாடு யாதவ மகாசபைத் தலைவர் நாசே.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது: முன்னேறிய ஜாதியில் உள்ள ஏழை எளியோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டதிருத்தம் சமூகநீதி தத்துவத்திற்கு முரணானது. ஏழைகளில் ஜாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடும். பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு சமூகநீதிக்கு எதிரானது.
யாதவ சமுதாயத்தினர் ஏற்கெனவே, பிற்படுத் தப்பட்ட சமுதாயத்திற்கு உட்பட்ட 50 சதவிகித இட ஒதுக்கீட்டின்கீழ் பயனடைந்து வருகின்றனர். பொருளாதரத்தில் நலிவடைந்த முன்னேறிய சமுதாயத்தினருக்கு அமல்படுத்தினால், நமக்கு எந்தப் பலனும் ஏற்படாது. நமக்குப் பின்னடைவு தான் ஏற்படும் என்பது தமிழ்நாடு யாதவ மகா சபையின் தெளிவான கருத்து இது. உச்சநீதி மன்ற கருத்திற்கு தமிழ்நாடு யாதவ மகாசபை உடன் படவில்லை. வேறு சிலர் யாதவ மகாசபையின் சார்பாக ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டுள் ளனர். அந்த அறிக்கைக்கும், நம் தமிழ்நாடு யாதவ மகாசபைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தமிழ்நாடு யாதவ மகாசபையின் தலைவர் நாசே.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment