தமிழ் எழுத்தாளர்கள் 10 பேர்களுக்கு வீடு தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 24, 2022

தமிழ் எழுத்தாளர்கள் 10 பேர்களுக்கு வீடு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை,நவ.24- “தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத் தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருது களைப் பெற்றவர் களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ் நாடு அரசு மூலமாக வீடு வழங்கப் படும்” என்று கனவு இல்லத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். 

இந்த அறிவிப்பின்படி 2021-2022ஆம் ஆண்டில் ஆறு எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, 2022-2023ஆம் ஆண்டில் ஜி.திலகவதி, பொன்.கோதண்டராமன், சு.வெங்கடேசன், ப.மருதநாயகம், மறைமலை இலக்குவனார், மருத்துவர் முனைவர் இரா. கலைக்கோவன், எஸ்.இராம கிருஷ்ணன், கா.ராஜன், ஆர்.என்.ஜோ.டி.குருஸ், சி.கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய 10 தமிழ் எழுத்தாளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment