எதிர்க்கும் போதுதான் பெரியாரியம் வீரியம் கொண்டு எழும்: மதுக்கூர் ராமலிங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

எதிர்க்கும் போதுதான் பெரியாரியம் வீரியம் கொண்டு எழும்: மதுக்கூர் ராமலிங்கம்

மன்னார்குடி, அக். 19- 1.10.2022 சனிக் கிழமை மாலை 6.00 மணியளவில் மன்னார்குடி சித்தாம்பூர் திருமண மண்டபத்தில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 144ஆம் ஆண்டுப் பிறந்தநாள் மற்றும் மேனாள் மாவட்டத்தலைவர் ஆர்.பி. சாரங் கன், நகரச் செயலாளர் கே.ராஜ கோபால் ஆகியோரின் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மன்னை ஒன்றிய தலைவர் மு. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார், நகரத்தலைவர் எஸ்.என். உத்திராபதி வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்திற்கு மாவட் டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த் தன், மாவட்டச் செயலாளர் கோ. கணேசன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ். அன்பழகன், ப.க. மாவட் டத் தலைவர் வை. கவுதமன், பொதுக்குழு உறுப்பினர் ப. சிவஞானம், ஆசிரியரணி மண்டல அமைப்பாளர் சி. இரமேஷ், மாவட்டத்துணைச்செயலாளர் வீ. புட்பநாதன், மன்னை ஒன்றியச் செயலாளர் கா. செல்வராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கழ கப் பேச்சாளர்கள் இராம. அன் பழகன், வழக்குரைஞர் சு. சிங்கார வேலு ஆகியோர் தொடக்க உரை யாற்றினர். பேச்சாளர் வழக்குரை ஞர் பூவை. புலிகேசி கூட்டத்தின் நோக்கம் பற்றியும் தற்போதைய சூழலில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செயல்பாடுகளை எப்படிப் புரிந்து கொள்வது எனவும் சான்றுகளுடன் உரையற்றினார்.

தொடர்ந்து கழகத்தின் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக் குமார் தந்தை பெரியார் பிறந்த நாளில் கழகத் தோழர்கள் செய்ய வேண்டிய திட்டங்கள் பற்றியும் மேனாள் மாவட்டத் தலைவர் ஆர்.பி. சாரங்கன் செயல்பாடுகள் கழகத்திற்கு எப்படி வலிமை சேர்த்தது என்பதைப் பற்றியும், கே. இராஜகோபாலைப் பற்றியும் நினை வூட்டிக் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து தீக்கதிர் நாளிதழின் பொறுப்பாசிரியரும் தமிழ்நாடு முற்போக்குக் கலைஞர்கள் எழுத் தாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கவிஞர் மதுக்கூர் இராம லிங்கம்  சிறப்புரை ஆற்றினார். 

அவர் தந்தை பெரியார் பிறந்த நாள் என்பது கருத்துப் பரப்பும் விழா, பொதுக்கூட்டத்திற்கு தடை விதித்தால் அரங்க கூட்டமாக நடத்துவோம். அரங்கக் கூட்டத் திற்குத் தடை விதித்தால் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் பிரச் சாரக் கூட்டம் நடத்திடுவோம். இப்படி எந்தச சூழ்நிலையிலும் இயக்கப்பணி ஆற்றுபவர்கள்தான் பெரியார் தொண்டர்கள். தந்தை பெரியார் இந்தச் சமுதாயத்தைத் திருத்தி மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றிட பாடுபட்டத் தலைவர் ஒரு தலைவரின் கொள்கை அவர் வாழும் காலத்திலேயே பெரும் வெற்றிபெற்றது என்றால் அது பெரியாரின் கொள்கையே. அவர் கொள்கை எப்படி உறுதியா னதோ அதேபோன்று அவரின் தளபதிகளாக வாழ்ந்த எம்.ஆர். இராதா துணிச்சலாக பெரியார் கொள்கையைத் தன் நாடகங்கள் மூலம் கொண்டு சென்றவர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்த வயதிலும் ஓய்வின்றி உழைக்கின் றார். அதனால் அரசியல் எதிரிகள் அஞ்சுகின்றனர். எப்படியாவது ஆளுநர் மூலம் சனாதனத்தை பரப்ப முயற்சி செய்கின்றனர். நம் மைவிட நம் இளைஞர்கள் சனா தனிகளுக்கு தக்க பதிலடி தருகின் றனர். பெரியார் எங்கும் பரவி இருக்கிறார். எதிர்ப்பு காட்ட காட்ட எழுச்சி கொண்ட உத்வே கத்துடன் அவர் கொள்கை பரவும் என்று சிறப்புரை ஆற்றினார். 

கூட்டத்தில் ஆசிரியரணி மாவட்டத் தலைவர் தங்க. வீரமணி, ஆசிரியரணி மாவட்டச் செயலா ளர் இரா. கோபால், மாவட்டத் துணைத்தலைவர் ந. இன்பக்கடல், ப.க. நகரத்தலைவர் கோவி. அழகிரி, மன்னை. சித்து, நகர இளைஞரணித் தலைவர் மணிகண்டன், இளை ஞரணி ஒன்றியத் தலைவர் பி. இளங் கோவன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் க. இளங்கோவன், கவிஞர் கோ. செல்வம், நகர கழக அமைப்பாளர் மு. சந்திரபோஸ், நகர கழக துணைத்தலைவர் வே. அழகேசன், நீடா. ஒன்றியச் செயலாளர், இரா. சக்திவேல் நீடா. நகரத் தலைவர் பி.எஸ்.ஆர். அமிர்தராஜ், கோட்டூர் ஒன்றியத் தலைவர் ஆர். நாராயணசாமி, கோட்டூர் ஒன்றியச்செயலாளர் மு. தமிழ்மணி, ஒன்றிய அமைப்பாளர் எம்.பி. குமார், மன்னார்குடி சிவா. வணங்காமுடி, ப.க. மன்னை ப.அய் யப்பன், ப.க. மன்னை முரளிதரன், ஆர். பாலகிருஷ்ணன், இரா. வெங்கட்ராமன், மேலவாகல் கோ. திரிசங்கு, மேலத்திருப்பாலக்குடி எம். கோவிந்தராசு, மேலவாகம் அ. குணசேகரன், மன்னை இந்திர சித்து, ப.க. தோழர் இளைஞரணித் தலைவர் க.இராஜேஷ் கண்ணன், இளைஞரணி அமைப்பாளர் ச.அய்யப்பன், மாணவர் கழகத் தோழர்கள் ஆதனூர் சாருகாசன், கோவில்வெண்ணி ஆர்யா, ம.தீபக், பெரியகோட்டை, வீரமணி, சிவ குரு மற்றும் மன்னை ப.க. தோழர் ஆசிரியர் காமராசு மற்றும் எழுத் தாளர்கள் கலைஞர்கள் சங்கப் பொறுப்பாளர்கள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் பொறுப்பா ளர்கள் என ஏராளமான தோழர் கள் பங்கேற்றனர். இறுதியில் நகர கழகச் செயலாளர் மு.இராமதாசு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment