ஒன்றிய அரசின் வஞ்சனை அனைத்துப் படிப்புகளுக்கும் - ஒரே நுழைவுத் தேர்வாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

ஒன்றிய அரசின் வஞ்சனை அனைத்துப் படிப்புகளுக்கும் - ஒரே நுழைவுத் தேர்வாம்

காஞ்சிபுரம், அக்.10 நாட்டில் அனைத்து பாடங்களுக்கும் ஒரே பொது நுழைவு தேர்வு நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாக ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் கூறினார். காஞ்சிபுரத்திற்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக  ஒன்றிய அரசின் கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் நேற்றுமுன்தினம் (8.10.2022) இரவு  வந்தார்.   அதனை அடுத்து ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், செய்தியாளர்களிடம் பேசுகையில்,  கல்வியாளர்களுக்கு கல்வி நிறுவனங்களின் நுழைவு வாயிலில் பெரிய கண்ணாடியை பொருத்த வேண்டும். அதை மாணவர்கள் பார்க்கும் போதெல்லாம் அவர்களின் பல்வேறு அம்சங்களை பற்றி அறிந்து கொள்வார்கள். இது சுய நினைவை மேம்படுத்த உதவும். நீட் தேர்வு தேசத்தின் பொதுவான நுழைவுத் தேர்வு. இது பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும். ஒரு நுழைவுத் தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் பல்வேறு படிப்புகளுக்கு பல்வேறு கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்க மட்டுமே பெரும் பணம் செலவழிக்கப்படும், மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் எந்த மருத்துவப் படிப்புகள் இருந்தாலும் பெறலாம். மேலும், மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளை எழுதாமல் இருக்கவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கவலையில் இருந்து காப்பாற்றவும் அனைத்து பாடங்களுக்கும் ஒரே பொது நுழைவுத்தேர்வை நடத்திட ஒன்றிய அரசு திட்டமிட்டு அது குறித்து  அரசு யோசித்து வருகிறது. நாட்டின் சிறந்த கல்வி குறித்து, புகழ்பெற்ற விஞ்ஞானி தலைமையிலான குழு மூலம் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020அய் ஒன்றிய அரசு அறிவித்தது. புதிய கல்விக் கொள்கை மாணவர்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்த உதவும் என்றார்.


No comments:

Post a Comment