தருமபுரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் மற்றும் கழக இளைஞரணி இணைந்து நடத்திய "தீபாவளி திடுக்கிடும் உண்மைகள்!" "தீபாவளி என்றால் என்ன?" எனும் 1000 துண்டறிக்கை பிரச்சார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விடுதலை வாச கர் வட்ட செயலாளர் சுதாமணி, பொதுக்குழு உறுப்பினர் கதிர், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி மற்றும் தையல் பயிற்சி பயிலும் மகளிர் தோழியர்கள் காவியா, தீபிகா, தீபா, துர்கா, ஷில்பா, பர்ஹத், யாஸ்மின், தக்ஸா ஆகிய அனைவரும் இணைந்து இந்த பிரச்சாரத் துண் டறிக்கை வழங்கப்பட்டது.
பாப்பிரெட்டிபட்டி பேருந்து நிலையம் அருகில் மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி தலைமையில், ஒன்றிய இளைஞரணி அமைப் பாளர் வினோத் குமார் மற்றும் தோழர்கள் இணைந்து "தீபாவளி திடுக்கிடும் உண்மைகள்" துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தருமபுரி நகரில் பேருந்து நிலையத்தில் தர்மபுரி மாவட்ட தலைவர் வீ. சிவாஜி தலைமையில் மாவட்டச் செயலாளர் பீம .தமிழ் பிரபாகரன் முன்னிலையில் தர்மபுரி மண்டல தலைவர்
அ. தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார் மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு. யாழ் திலீபன் மண் டல மாணவரணி செயலாளர் இ.சமரசம் ஆசிரியர் அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆசிரியர்
தீ.சிவாஜி ஆசிரியர் சாமிநாதன் காமலாபுரம்
கு.சரவணன் இரா.ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment