செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

செய்திச் சுருக்கம்

▶️பருவ மழை

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளதால் ‘ஆரஞ்ச் அலர்ட்' விடப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சியில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது.

▶️பறிமுதல்

    சென்னையில் சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 1,027 வாக னங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

▶️தயார்

    வடகிழக்கு பருவமழை பாதிப்பு மீட்புப் பணியில் ஈடுபட தீயணைப்புத் துறை தயார் நிலையில் உள்ளது என தீயணைப்புத் துறை டி.ஜி.பி. ரவி தெரிவித்துள்ளார்.

▶️ஆய்வு

    தமிழ்நாடு முழுவதும் நகர் ஊரமைப்பு இயக்ககம் அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்ய பத்திரப் பதிவுத்துறை அய்.ஜி. உத்தரவு.

▶️இணைப்பு

    பொதுமக்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயிலுடன் வேளச்சேரி - கடற்கரை இடையே இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில்கள் இணைக்கப்படும் என மெட்ரோ ரயில்வே அறிவிப்பு.

▶️நோட்டீசு

    ராமேஸ்வரம் கோயில் நகைகள் எடை குறைவு குறித்து விளக்கம் கேட்டு ஊழியர்கள் 36 பேருக்கு கோயில் நிர்வாகம் தாக்கீது அனுப்பியுள்ளது.

▶️அபராதம்

    பல்லடம் பணிக்கம்பட்டியை சேர்ந்த சுலோசனாவுக்கு அறுவைச் சிகிச்சையின் போது வயிற்றில் பஞ்சை வைத்து தைத்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு.

▶️செயலிகள்

    சீன கடன் செயலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு.

▶️ஆபத்து

    உக்ரைன் உடனான தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை ரஷ்யா ரத்து செய்துள்ளதால் உலகளவில் மீண்டும் தானியப் பற்றாக்குறை, பட்டினிச் சாவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


No comments:

Post a Comment