இப்படியும் ஒரு மூடநம்பிக்கை கணவன் நலனுக்காக 'கர்வா சவுத்' விரதமாம் பா.ஜ.க. முதலமைச்சர்களின் மனைவியர் கடைப்பிடித்தனராம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 15, 2022

இப்படியும் ஒரு மூடநம்பிக்கை கணவன் நலனுக்காக 'கர்வா சவுத்' விரதமாம் பா.ஜ.க. முதலமைச்சர்களின் மனைவியர் கடைப்பிடித்தனராம்

போபால்,அக்.15- Ôகர்வா சவுத் விரதம்Õ என்கிற பெயரில் கண வனின் நலன் வேண்டி பெண் களால் Ôவிரதம்Õ அனுசரிக்கப் பட்டதாம். கர்வா சவுத் விரதம் அன்று பெண்கள் உணவு உண்ணாமல் நோன்பு இருந்து இரவு சல்லடையில் தீபம் ஏற்றி நிலவு பார்த்து பின்னர் கண வனை அச்சல்லடை வழியாக பார்ப்பார்கள். இதனால் அவர் களுடைய மாங்கல்ய பலம் கூடும் என்பது வழிவழியாக வந்துள்ள நம்பிக்கை. 

இதனை பொதுமக்கள் மட்டுமின்றி மத்தியப்பிரதேசம், உத்தரகாண்ட் முதலமைச்சர் களின் மனைவிகளும் கடைப் பிடித்தனர். 

போபால் நகரில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மனைவி, சல்லடையில் தீபம் ஏற்றி நிலவு பார்த்து பின்னர் கணவர் காலை தொட்டு வணங்கினார்.

இதேபோன்று உத்தர காண்ட் முதலமைச்சர் புஸ்பர் சிங் தாமியின் மனைவியும், கர்வா சவுத் விரதம் கடைப் பிடித்து கணவரை வணங்கினார். வடமாநிலங்களில் கர்வா சவுத் விரதம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

 இந்த விரதம் மூலம் கணவன், மனைவி இடையே ஒற்றுமையும், மாங்கல்ய பலமும், நீண்ட ஆயுள், ஆரோக்கிய அய்ஸ்வர்ய மும் உண்டாகி விடும் என்பது நம்பிக்கையாம்.

மதம் போதிப்பது இது போன்ற பெண்ணடிமைத் தத்துவத்தைதானா?

மனைவி நலனுக்காக கண வன்மாருக்கு ‘எந்த விரதமாவது’ உண்டா?

No comments:

Post a Comment