செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

செய்திச் சுருக்கம்

தடை

பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு இன்னும் குறையவில்லை. இந்த பிளாஸ்டிக் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்களை ஏன் தடை செய்யக் கூடாது? என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி?

பறிமுதல்

டில்லியில் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறியதாக 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13,700 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மறுப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்கத் தகுதியில்லை என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய முகாந்திரம் இல்லை என்று கூறி மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

உழவர் சந்தை

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு  194 உழவர் சந்தைகள் இயங்கும், விரைவில் மாலை நேர விற்பனை தொடங்கும் என தமிழ்நாடு  வேளாண்மைத்துறை செயலாளர் சமயமூர்த்தி தகவல்.

மானியம்

நகர்ப்புறங்களின் ஒருங்கிணைப்புக்காக ஒன்றிய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை 4 மாநிலங்களுக்கு ரூ.1,764 கோடி மானியம் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு இதுவரை ரூ.14.70 கோடி கிடைத்து இருக்கிறது.

இழப்பு

கடந்தஆண்டு, அதிக வெயில் காரணமாக இந்தியா பல்வேறு துறைகளில் ரூ.13 லட்சம் கோடி வருவாய் இழப்பை சந்தித்துள்ளது என பன்னாட்டு 'பருவ நிலை அறிக்கை  - 2022'இல் தகவல்.நீடிக்கிறது

கரோனா தொற்று நோய் இன்னும் பன்னாட்டு பொது சுகாதார அவசர நிலையாகவே நீடிக்கிறது என உலக சுகாதார நிறுவனம் தகவல்.

மீட்பு

கடந்த15 மாதங்களில் 3,566 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்.

உத்தரவு

நீதிபதிகள் மற்றும் பொது மக்களுக்கு எதிராக ஆதாரம் இல்லாமல் இழிவாக, அவதூறாக கருத்துகளை வெளியிடும் சமூக ஊடகங்கள் (யூடியூப் சேனல்கள்) மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.


No comments:

Post a Comment