தமிழ்நாடு மீனவர்கள் கைது இலங்கையின் விபரீத செயல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

தமிழ்நாடு மீனவர்கள் கைது இலங்கையின் விபரீத செயல்

புதுக்கோட்டை,அக்.21- புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து, நேற்று முன்தினம் (19.10.2022) 97 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இதில், ஒரு படகில் சென்ற கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் அருள் (36), கனகராஜ் மகன் அய்யப்பன் (30), சோனையன் மகன் சுந்தரம் (26) ஆகிய 3 பேரும் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துள்ளனர்.

அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 3 பேரையும் கைது செய்ததுடன், விசைப் படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர், இலங்கையில் உள்ள காங்கேசன் துறை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் சென்று, அந்நாட்டு மீன் வள அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து, விசாரணைக்குப் பிறகுஅவர்களை சிறையில் அடைத்தனர். விழா நாட்கள் வருகின்ற நிலையில், மீன் பிடிக்கசென்ற மீனவர்கள் 3 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருப்பது, அவர்களது குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment