தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 14, 2022

தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு

909 மய்யங்களில் 69,858 மாணவர்கள் பங்கேற்றனர்
3665 மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை!

    பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயர் ஆய்வு மய்யம், குழந்தைகளுக் கான அறிவியல் மாத இதழான ’பெரியார் பிஞ்சு’ ஆகி யவை இணைந்து ’பெரியார் 1000’ வினா-விடை தேர்வை பள்ளி மாணவர்களுக்கு 2010 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றன.

    தந்தை பெரியார் பற்றிய எளிமைப்படுத்தப்பட்ட, ஆயிரம் வினாக்களைக் கொண்ட ஒரு கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, அதிலி ருந்து தேர்வுகள் நடத்தப்பட்டன.

    எதிர்வரும் காலங்களில் மாணவர்கள் போட்டித் தேர்வு களையும், தகுதித் தேர்வுகளையும், திறனறித் தேர்வுகளை யும் எதிர்கொள்ளும் பயிற்சியை அளிக்கும் விதமாக இந்தத் தேர்வுகள் நிழலிட்டு விடை அளிக்கும் ’கோடிங் ஷீட்’ (OMR) முறையில் நடத்தப்பட்டது. தலா ஒரு மதிப்பெண் கொண்ட 45 கொள்குறி வகை (Objective type)  வினாக்களையும், எழுதி விடையளிக்கும் 5 மதிப் பெண்களுக்கான ஒரு குறுவினாவையும் கொண்ட 50 மதிப்பெண்களுக்கானத் தேர்வாக இது நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி தொடங்கி ஒவ்வொரு பள்ளியிலும் தனித்தனி யாக நடத்தப்பட்டது. மாணவர்கள் மிக ஆர்வமுடன் படித்து தந்தை பெரியாரையும் அவரது கொள்கைகளையும் அறிந்து கொண்டு தேர்வுகளை எழுதினர். 

தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு

    உயர் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இவை திருத்தப்பட்டு இன்று (14.10.2022) இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

    https://pmu.edu/periyarquiz/results.aspx என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவு எண் (Register No.) மூலம் தங்கள் மதிப்பெண் அறிந்து கொள்ளலாம்.. 

    தமிழ்நாட்டின் அனைத்துக் கல்வி மாவட்டங்களிலும் 909 தேர்வு மய்யங்களில் 69,858 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். தங்களது திறனை அறிந்து கொள்ள இத்தேர்வு பயன்பட்டதை மாணவர்கள் மகிழ்ந்து கூறினர். பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களை இத்தேர்வுகளுக்கு சிறப்பாக தயார்படுத்தியிருந்தனர். இறுதியாகக்  கேட்கப்பட்ட அய்ந்து மதிப்பெண்களுக்காக  எழுத்து வடிவிலான விடையைப் படிக்கும் போது மாணவர்கள் தந்தை பெரியாரை - அவரது கொள்கைகளை நேசிக்கும் வாசிக்கும் பண்புகள் வெளிப்பட்டிருந்தமைக் கண்டு அவற்றைத் திருத்திய பேராசிரியர்கள் மகிழ்ந்து கூறுகின்றனர். 

    கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு ஒவ்வொரு தேர்வு மய்யத்திலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  அந்த வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு தேர்வு மய்ய அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 3665 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. 

    இப்போட்டியை மிகச்சிறப்பாக  நடத்திட உதவிய அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் மாணவர்களை தேர்வு எழுத தயார் படுத்திய ஆசிரியர் பெருமக்களுக்கும், பெற்றோருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் பெரு மகிழ்வடைகிறது. இந்தத் தேர்வினை மிகச்சிறப்பாக நடத்திட உதவிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும், தோழர்களும் நன்றிக்கு உரியவர்கள் . 

தேர்வு விவரங்கள்:

  • மாவட்டங்கள்- 61
  • மய்யங்கள்- 909
  • மாணவர்கள்- 69,858
  • அதிக மதிப்பெண் பெற்றவர்கள் - 3665 
  • 45 மதிப்பெண்களுக்கு மேல் - 120  மாணவர்கள்
  • 40 மதிப்பெண்களுக்கு மேல் - 404 மாணவர்கள்                                                       

- இயக்குநர்,
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்

No comments:

Post a Comment