விண்கல்லில் மோதிய விண்கலம்; திசை திரும்பியது விண்கல்! நாசா புதிய சாதனை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 14, 2022

விண்கல்லில் மோதிய விண்கலம்; திசை திரும்பியது விண்கல்! நாசா புதிய சாதனை!

கலிபோர்னியா, அக்.14 விண்கற்களின் பயணப் பாதையை விண்கலங் களை மோதி திசை திருப் பும் முயற்சி வெற்றிப் பெற்றுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

விண்வெளி ஆய்வில் உலகின் பல நாட்டு விண் வெளி ஆய்வு மய்யங்களும் தீவிரமாக ஈடுபட்டு வந் தாலும், அவற்றில் முன் னணியில் அமெரிக்கா வின் நாசா விண்வெளி ஆய்வு மய்யம் இருந்து வருகிறது

சமீபத்தில் விண்வெளியிலேயே விண்கற்களை மோதி அதன் பாதையை மாற்றும் முயற்சியில் நாசா இறங்கியது.  DART Mission (Double Asteroid Redirection Test)  டார்ட் விண் கலம்  ‘Dimorphos’ என்னும் விண்கல் ஒன்றின் மீது மோதி தாக்க திட்டமிடப் பட்டது.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பூமியிலி ருந்து 11 மில்லியன் தொலைவில் உள்ள டிமார்பஸ் விண்கல்லை நாசாவின் டார்ட் விண் கலம் தாக்கியது. இது நேரடியாக ஒளிபரப்பப் பட்டது. விண்கலம் தாக் கிய பின் விண்கல்லின் பயண பாதையை ஆய்வு செய்ததில் விண்கல்லின் சுற்றுப்பாதை 32 நிமிடங் களுக்கு மாற்றி அமைக் கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளதால் எதிர் காலத்தில் பூமியை நோக்கி விண்கற்கள் வந் தால் அவற்றை விண்கலத் தால் தாக்கி பாதையை மாற்ற முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment