பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி

திருச்சி, அக். 22- மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை (பிங்க் - அக்டோபர்) முன்னிட்டு திருச்சி ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்று நோய் மருத்துவமனை மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி இணைந்து மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பேரணி திருச்சியில் 19.10.2022 அன்று காலை 9 மணியளவில் நடை பெற்றது. 

பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யத்தின் நிர்வாக இயக்குநர்கள் மரு. கோவிந்ததராஜ், மரு. சசிப்ரியா கோவிந்தராஜ் ஆகியோர் முன்னி லையில் திருச்சி காவல் துறை துணை ஆணையர் சிறீதேவி பேர ணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக் களுக்கு ஏற்படுத்தவே இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை ஊடகங்களின் மூலம் காணக்கூடிய பொதுமக்கள் குறிப் பாக பெண்கள் விழிப்புணர்வு பெற்று பரிசோதனைகளுக்கு முன் நின்றால் இப்பேரணி வெற்றி பெறும் என்றும் ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநரும் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை மருத்துவருமான மரு. கோவிந்த ராஜ்  தெரிவித்தார்.

பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, பெண்கள் தங்கள் உடல் சார்ந்த நலனில் அதிக அக்கறை செலுத்துவது கிடையாது. இதனால்தான் ஆண்களைக்காட் டிலும் பெண்கள் அதிகளவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள் ளனர். அதிலும் மார்பக புற்றுநோயினால் அதிக அளவிலான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற் படுத்தவே இப்பேரணி நடைபெறு கிறது. மேலும் வருகின்ற 21ஆம் தேதி பெரியார் மருந்தியல் கல்லூரி யில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை யின் மருத்துவர்கள் பங்கேற்கும் பெண்களுக்கான இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனையும் நடைபெறவிருக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட் டுக் கொண்டார்.

இப்பேரணியில் பெரியார் மருந் தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அமு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பேரா. அ. ஜெயலெட்சுமி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு அடங்கிய பதாகை களை ஏந்தியும், விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டும் நடந்து சென்றனர். இப்பேரணி திருச்சி மத்திய பேருந்து நிலைய பெரியார் சிலை அருகில் துவங்கி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் இனிதே நிறைவுற்றது. முன்னதாக திருச்சி சர்வைட் செவிலியர் கல்லூரி மாணவர்களின் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த வீதி நாடகம் நடைபெற்றது.

No comments:

Post a Comment