இந்தியாவில் புதிய வகை கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

இந்தியாவில் புதிய வகை கரோனா

புதுடில்லி,அக்.19- இந்தியாவில்தற்போது புதிய வகை கரோனா பரவல் மீண்டும் அச் சுறுத்தலை ஏற்படுத்துவதாக மாறியுள்ளது. முதன் முதலில் பிஎப்.7 வகை கரோனா வைரஸ் சீனாவில்தான் அண்மையில் கண்ட றியப்பட்டது. இது நாடுகளுக்கும் பரவியது.

இந்நிலையில், குஜராத் பயோடெக்னாலஜி ஆய்வு மய்யம் நடத்திய சோதனையில் இந்தியா விலும் பிஎப்.7 வகை கரோனா பாதிப்பு இருப்பதை முதன் முதலாககண்டறிந்து உறுதி செய்துள்ளது. சீனாவின் மங்கோலியா பிராந்தியத்தில் உருவாகி உலகின் பிற பகுதிகளுக்கு பரவிய பிறகு ஒமைக்ரானின் புதிய உட்பிரிவு வகையான பிஏ5.1.7 கரோனா வைரஸ் அதிகம் பரவும் தன்மை கொண்டதாகவும், தொற்றை ஏற்படுத்தக் கூடியதாகவும் உருமாற்றம் கண்டுள்ளது.

No comments:

Post a Comment